• May 21 2024

தன்பாலின உறவுக்கு கடுமையான தண்டனை..! புதிய சட்டம் இயற்றிய முக்கிய நாடு..!samugammedia

Sharmi / Jun 1st 2023, 6:14 pm
image

Advertisement

தன்பாலின திருமணத்திற்கு எதிராக புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

உகண்டா அதிபர் யோவேரி முசெவேனியே இந்த சட்டத்தினை இயற்றியுள்ளார்.

இயற்றப்பட்ட புதிய சட்டத்தின் மூலம் தன்பாலின சேர்க்கை மற்றும் திருமணம் போன்றவற்றுக்கு வாழ்நாள் சிறை தண்டனை மற்றும் மரண தண்டனை போன்ற கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். இந்த கடுமையான புதிய தன்பாலின எதிர்ப்பு சட்டத்தினை  கிழக்கு ஆப்பிரிக்க நாட்டில் பலர் வரவேற்றுள்ளனர்.

ஆயினும், இந்த சட்டத்திற்கு  மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அமெரிக்க உட்பட மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்த சட்டத்தின் பிரகாரம்  LGBTQ சமூகத்தைச் சார்ந்தவர் என்று கண்டறிவது தவறு இல்லை என்பதுடன்  அதனைத் தொடர்ந்து  தன்பாலின திருமணத்தில் ஈடுபடுவதே  சட்டப்படி குற்றமாக்கப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களுடனும், சிறார்களுடனும், வேறு பாதிக்கப்படக் கூடிய பிரிவைச் சேர்ந்தவர்களுடனும் உடலுறவு கொள்வதும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

சட்டத்தின்படி,  தன்பாலின சேர்க்கையில் ஈடுபட முயற்சிக்கும்  நபருக்கு 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

உகண்டாவில் காலனித்துவ கால சட்டத்தின் கீழ் தன்பாலின ஈர்ப்பு முன்னதாகவே  சட்டவிரோதமானது. அந்த வழக்கின் குற்றத்திற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த சட்டத்தின் பொருளாதார விளைவுகள் குறித்து அமெரிக்கா எச்சரித்துள்ளது.

மேலும், ஆப்பிரிக்காவில் உள்ள 54 நாடுகளில், 30 ற்கும் மேற்பட்ட நாடுகளில் தன்பாலின உறவு குற்றமாக கருத்தப்படுகின்றது.

தன்பாலின உறவுக்கு கடுமையான தண்டனை. புதிய சட்டம் இயற்றிய முக்கிய நாடு.samugammedia தன்பாலின திருமணத்திற்கு எதிராக புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உகண்டா அதிபர் யோவேரி முசெவேனியே இந்த சட்டத்தினை இயற்றியுள்ளார். இயற்றப்பட்ட புதிய சட்டத்தின் மூலம் தன்பாலின சேர்க்கை மற்றும் திருமணம் போன்றவற்றுக்கு வாழ்நாள் சிறை தண்டனை மற்றும் மரண தண்டனை போன்ற கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். இந்த கடுமையான புதிய தன்பாலின எதிர்ப்பு சட்டத்தினை  கிழக்கு ஆப்பிரிக்க நாட்டில் பலர் வரவேற்றுள்ளனர். ஆயினும், இந்த சட்டத்திற்கு  மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அமெரிக்க உட்பட மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த சட்டத்தின் பிரகாரம்  LGBTQ சமூகத்தைச் சார்ந்தவர் என்று கண்டறிவது தவறு இல்லை என்பதுடன்  அதனைத் தொடர்ந்து  தன்பாலின திருமணத்தில் ஈடுபடுவதே  சட்டப்படி குற்றமாக்கப்பட்டுள்ளது.எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களுடனும், சிறார்களுடனும், வேறு பாதிக்கப்படக் கூடிய பிரிவைச் சேர்ந்தவர்களுடனும் உடலுறவு கொள்வதும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. சட்டத்தின்படி,  தன்பாலின சேர்க்கையில் ஈடுபட முயற்சிக்கும்  நபருக்கு 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.உகண்டாவில் காலனித்துவ கால சட்டத்தின் கீழ் தன்பாலின ஈர்ப்பு முன்னதாகவே  சட்டவிரோதமானது. அந்த வழக்கின் குற்றத்திற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த சட்டத்தின் பொருளாதார விளைவுகள் குறித்து அமெரிக்கா எச்சரித்துள்ளது. மேலும், ஆப்பிரிக்காவில் உள்ள 54 நாடுகளில், 30 ற்கும் மேற்பட்ட நாடுகளில் தன்பாலின உறவு குற்றமாக கருத்தப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement