அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் கடந்த திங்கட்கிழமை (10) இரவு பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரை 48 மணிநேரம் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்யுமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
34 வயதுடைய பிரதான சந்தேக நபர், அநுராதபுரம் பொலிஸாரால் இன்று வியாழக்கிழமை (13) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபரின் சகோதரி உட்பட இருவர் அநுராதபுரம் பொலிஸாரால் நேற்று புதன்கிழமை (12) கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம்; சந்தேக நபரை 48 மணிநேர தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் கடந்த திங்கட்கிழமை (10) இரவு பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரை 48 மணிநேரம் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்யுமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 34 வயதுடைய பிரதான சந்தேக நபர், அநுராதபுரம் பொலிஸாரால் இன்று வியாழக்கிழமை (13) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபரின் சகோதரி உட்பட இருவர் அநுராதபுரம் பொலிஸாரால் நேற்று புதன்கிழமை (12) கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.