• Mar 14 2025

புதுக்குடியிருப்பில் மிளகாய்த்தூளை தூவி நகைகள் திருட்டு - மடக்கிப்பிடித்த பொலிஸார்

Thansita / Mar 13th 2025, 8:28 pm
image

புதுக்குடியிருப்பு வேணாவில் பகுதியில் திருட்டுடன் சம்பந்தப்பட்ட சந்தேகநபர் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்

புதுக்குடியிருப்பு வேணாவில்  பகுதியில் கடந்த  08.03.2025 அன்று அதிகாலை 2.30 மணியளவில் வீட்டுக்குள் புகுந்த இனம் தெரியாத நபர் மிளகாய்துளை தூவிவிட்டு வீட்டிலிருந்த ஆண் ஒருவரின் 5,95,000 பெறுமதியான  தங்கச்சங்கிலியை திருடி சென்றுள்ளார்.

குறித்த  சம்பவம்  தொடர்பாக பாதிக்கபட்ட நபர் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு செய்துள்ளார்

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸாரின் தொடர் தேடலில்  குறித்த திருட்டுடன் தொடர்புடைய சந்தேகநபரை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர்.ஹேரத் தலைமையில் பொலிஸ் சார்ஜன்களான (54721) பிறேமதிலக், (8584) புவிசந்திரன், (36841) குமார ஆகிய பொலிஸ் குழுவினரால் நேற்றையதினம் (12.03.2025) புதுக்குடியிருப்பு பகுதியில் வைத்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்  34 வயது மதிக்கத்தக்கவர் என பொலிஸார் தெரிவித்தனர் 

குறித்த சந்தேக நபர் விசாரணைகளின் பின் நேற்றைய தினம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்

 எதிர்வரும் 25.03.2025 வரை  விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பில் மிளகாய்த்தூளை தூவி நகைகள் திருட்டு - மடக்கிப்பிடித்த பொலிஸார் புதுக்குடியிருப்பு வேணாவில் பகுதியில் திருட்டுடன் சம்பந்தப்பட்ட சந்தேகநபர் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்புதுக்குடியிருப்பு வேணாவில்  பகுதியில் கடந்த  08.03.2025 அன்று அதிகாலை 2.30 மணியளவில் வீட்டுக்குள் புகுந்த இனம் தெரியாத நபர் மிளகாய்துளை தூவிவிட்டு வீட்டிலிருந்த ஆண் ஒருவரின் 5,95,000 பெறுமதியான  தங்கச்சங்கிலியை திருடி சென்றுள்ளார்.குறித்த  சம்பவம்  தொடர்பாக பாதிக்கபட்ட நபர் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு செய்துள்ளார்முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸாரின் தொடர் தேடலில்  குறித்த திருட்டுடன் தொடர்புடைய சந்தேகநபரை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர்.ஹேரத் தலைமையில் பொலிஸ் சார்ஜன்களான (54721) பிறேமதிலக், (8584) புவிசந்திரன், (36841) குமார ஆகிய பொலிஸ் குழுவினரால் நேற்றையதினம் (12.03.2025) புதுக்குடியிருப்பு பகுதியில் வைத்து கைது செய்தனர்.கைது செய்யப்பட்டவர்  34 வயது மதிக்கத்தக்கவர் என பொலிஸார் தெரிவித்தனர் குறித்த சந்தேக நபர் விசாரணைகளின் பின் நேற்றைய தினம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார் எதிர்வரும் 25.03.2025 வரை  விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement