• May 04 2025

துபாயிலிருந்து சட்டவிரோதமாக பொருட்களை கொண்டுவந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Thansita / Apr 10th 2025, 4:59 pm
image

ஒன்றரை மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்களை சட்டவிரோதமாக கொண்டுவந்த  சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்

குறித்த சந்தேகநபர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் 

கொழும்பு குணசிங்கபுர பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

சந்தேக நபர் நேற்று காலை துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.பின்னர் விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற போது குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேக நபர் கொண்டுவந்த பயணப்பொதிகளிலிருந்து 35 மடிக்கணினிகள், 3 கணினிகள், 10 ஐ போன்கள், 100 சிம் கார்டுகள் மற்றும் ஒரு தொகை காலணிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு  மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொகொண்டு வருகின்றனர்.

துபாயிலிருந்து சட்டவிரோதமாக பொருட்களை கொண்டுவந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி ஒன்றரை மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்களை சட்டவிரோதமாக கொண்டுவந்த  சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்குறித்த சந்தேகநபர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் கொழும்பு குணசிங்கபுர பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.சந்தேக நபர் நேற்று காலை துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.பின்னர் விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற போது குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.இதன்போது சந்தேக நபர் கொண்டுவந்த பயணப்பொதிகளிலிருந்து 35 மடிக்கணினிகள், 3 கணினிகள், 10 ஐ போன்கள், 100 சிம் கார்டுகள் மற்றும் ஒரு தொகை காலணிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்ட சந்தேக நபரை விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு  மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொகொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now