• May 03 2024

டிக்டாக் பாவனையாளர்களுக்கு அதிர்ச்சியான செய்தி...! அரசு அதிரடி முடிவு...!samugammedia

Sharmi / Nov 15th 2023, 8:46 am
image

Advertisement

டிக்டாக் செயலியை பயன்படுத்த நேபாள அரசு அமைச்சரவை தடைவிதித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா,அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் டிக்டாக் செயலிக்கு ஏற்கனவே தடை விதித்திருக்கின்ற நிலையில் நேபாள அரசு அமைச்சரவையும் டிக்டாக்கை தடை செய்துள்ளது.

சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும், ‘பைட் டான்ஸ்’ என்ற நிறுவனம், டிக்டாக் என்ற சமூக வலைத்தள செயலியை உருவாக்கியது. 

இந்த செயலி உலகம் முழுவதும் செயல்பட்டு வந்தது.

சமீபகாலமாக இந்தச் செயலியின் மூலமாக பல்வேறு மதத்தினர் இடையே வெறுப்புணர்வு தூண்டும் வகையில் காணொளிகள் பதிவிட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 

இதனால் சமூக நல்லிணக்கத்திற்குக் கேடு விளைவிக்கும் செயல்கள் அதிகரித்துள்ளதாக, நேபாள அரசு கண்டறிந்துள்ளது.

இதை அடுத்து, பிரதமர் புஷ்ப கமல் பிரசண்டா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், டிக்டாக் செயலிக்குத் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிக்டாக் பாவனையாளர்களுக்கு அதிர்ச்சியான செய்தி. அரசு அதிரடி முடிவு.samugammedia டிக்டாக் செயலியை பயன்படுத்த நேபாள அரசு அமைச்சரவை தடைவிதித்துள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா,அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் டிக்டாக் செயலிக்கு ஏற்கனவே தடை விதித்திருக்கின்ற நிலையில் நேபாள அரசு அமைச்சரவையும் டிக்டாக்கை தடை செய்துள்ளது.சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும், ‘பைட் டான்ஸ்’ என்ற நிறுவனம், டிக்டாக் என்ற சமூக வலைத்தள செயலியை உருவாக்கியது. இந்த செயலி உலகம் முழுவதும் செயல்பட்டு வந்தது.சமீபகாலமாக இந்தச் செயலியின் மூலமாக பல்வேறு மதத்தினர் இடையே வெறுப்புணர்வு தூண்டும் வகையில் காணொளிகள் பதிவிட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் சமூக நல்லிணக்கத்திற்குக் கேடு விளைவிக்கும் செயல்கள் அதிகரித்துள்ளதாக, நேபாள அரசு கண்டறிந்துள்ளது.இதை அடுத்து, பிரதமர் புஷ்ப கமல் பிரசண்டா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், டிக்டாக் செயலிக்குத் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement