• Jan 14 2025

வீடொன்றின் மீது அதிகாலையில் துப்பாக்கிச் சூடு! மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் பரபரப்பு

Chithra / Dec 24th 2024, 8:08 am
image

 

கம்பஹா மாவட்டம், ஜாஎல பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இன்று அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரு நபர்களினால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜாஎல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும், இந்த துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் குறித்த வீட்டின் கதவு மற்றும் சுவர்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வீட்டின் மீது கடந்த 15 ஆம் திகதியும் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த சம்பவங்கள் தொடர்பிலான மேலதிக விசாரணையை ஜாஎல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வீடொன்றின் மீது அதிகாலையில் துப்பாக்கிச் சூடு மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் பரபரப்பு  கம்பஹா மாவட்டம், ஜாஎல பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இன்று அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரு நபர்களினால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜாஎல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.எனினும், இந்த துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் குறித்த வீட்டின் கதவு மற்றும் சுவர்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இந்த வீட்டின் மீது கடந்த 15 ஆம் திகதியும் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.இந்த சம்பவங்கள் தொடர்பிலான மேலதிக விசாரணையை ஜாஎல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement