• Nov 24 2024

'ஸ்டென்ட்' குழாய்கள் தட்டுப்பாட்டு - உயிராபத்தில் இருதய நோயாளிகள்..! வைத்தியர் அதிர்ச்சித் தகவல்

Chithra / Jan 16th 2024, 3:31 pm
image

 

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் "ஸ்டென்ட்" குழாய்கள் தட்டுப்பாடு காரணமாக இருதய நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடக பேச்சாளரான வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இருதய நோயாளிகளின் உயிராபத்தில் இருப்பதோடு,

சத்திரசிகிச்சைக்காக காத்திருப்போரின் சிகிச்சைக் காலம் நீடிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால தெரிவிக்கையில்,

"ஸ்டென்ட்" குழாய்கள் தட்டுப்பாடு காரணமாக இவற்றை இறக்குமதி செய்வது தொடர்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

'ஸ்டென்ட்' குழாய்கள் தட்டுப்பாட்டு - உயிராபத்தில் இருதய நோயாளிகள். வைத்தியர் அதிர்ச்சித் தகவல்  கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் "ஸ்டென்ட்" குழாய்கள் தட்டுப்பாடு காரணமாக இருதய நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடக பேச்சாளரான வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக இருதய நோயாளிகளின் உயிராபத்தில் இருப்பதோடு,சத்திரசிகிச்சைக்காக காத்திருப்போரின் சிகிச்சைக் காலம் நீடிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.இது தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால தெரிவிக்கையில்,"ஸ்டென்ட்" குழாய்கள் தட்டுப்பாடு காரணமாக இவற்றை இறக்குமதி செய்வது தொடர்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement