• Oct 27 2024

சூரிய கிரகணத்தின் போது அவதானமாக இருக்க வேண்டுமா? பேராசிரியர் பிரதீபராஜா விளக்கம்..!!

Tamil nila / Apr 8th 2024, 10:03 pm
image

Advertisement

2024ம் ஆண்டின் மிகப்பெரிய சூரிய கிரகணம் நடக்கும் மிக முக்கியமான நாள் இன்றாகும். இந்த அரிய நிகழ்வானது கனடா, 15 அமெரிக்க மாநிலங்கள், மெக்ஸிகோ மற்றும் வட அமெரிக்கா உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் 4 மணித்தியாலம் 28 நிமிடங்கள் வரை நீடிக்கும்  என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 

முழு சூரிய கிரகணம் என்பது அரிதான நிகழ்வு என்று நாசா தெரிவித்துள்ளது. இந்த சூரிய கிரகணத்தில் விசேடம் என்னவென்றால், அடுத்த 20 வருடங்களுக்கு இப்படியொரு சூரிய கிரகணம் நடக்காது என்பதே. இது தொடர்பாக யாழ் புவியியற்துறை பேராசிரியர்.பிரதீபராஜா  தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில் 

இன்றைய தினம் (08) சூரிய கிரகணம் ஒன்று இடம்பெறுவதற்கு  வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. பொதுவாக 18 மாதங்களுக்கு ஒரு தடவை புவியானது தனது சுற்று வட்ட பாதையில் சூரியனை சுற்றி வருகிற போது சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் வருவதே சூரிய கிரகணம் என்று அழைப்போம். 

இன்றைய தினம் (08) சூரிய கிரகணமானது இலங்கை நேரப்படி இரவு 10:33 மணி முதல் அதிகாலை 2:22 வரை இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. பொதுவாக நீண்ட காலப்பகுதியில் இந்த சூரிய கிரகணம் நிகழ்வதால்,  50 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்கின்ற ஒரு சூரிய கிரகணமாக இந்நிகழ்வு கருதப்படுகிறது.

இந்த சூரிய கிரகணத்தை இலங்கையில் உள்ளவர்கள் நேரடியாக பார்ப்பதற்கு வாய்ப்புக்கள் குறைவு. சூரிய கிரகணம் ஆரம்பிக்கும் நேரம் மெக்ஸிகோ மக்கள் சூரிய கிரகணத்தை பார்ப்பார்கள். பின்னர் கனடா மக்கள் சூரிய கிரகணத்தை இறுதியாக பார்ப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. 

இந்த சூரிய கிரகணத்தால் நேரடியாக பாதிப்புக்கள் இல்லாவிடடாலும் கூட, சூரிய கிரகணத்தின் போது   உண்பதையோ, வெளியில் நடமாடுவதையோ எமது முன்னோர்கள் விரும்புவதில்லை. இதற்கு காரணம் பல உயிரினங்கள் சூரிய கிரகணத்தின் போது தங்களது நடத்தைகளை மாற்றிக்கொள்கின்றன. குறிப்பாக இந்த சூரிய கிரகணத்தின் போது ஏற்படும் கதிர்வீச்சு காரணமாக அல்லது இருட்டின் காரணமாக விலங்குகள் தங்களது நடத்தைகளை மாற்றிக்கொள்கின்றன. 

இந்த காலப்பகுதியில் இந்துக்களின் வழிபாட்டு தலங்களின் கதவுகள் யாவும் பூட்டப்பட்டு வழிபாட்டுக்கு தடை விதிக்கப்படும். அத்துடன் உணவு உண்பதையோ, வெளியில் நடமாடுவதையோ இந்துக்கள் தவிர்ப்பது வழமையாக இருக்கும். 

இலங்கைக்கு இந்த சூரிய கிரகணம் இடம்பெறும் காலப் பகுதி இருட்டாகவே இருக்கும். ஆகவே விலங்குகள் பதட்டத்தோடும், ஆக்ரோசமாகவும்  இருப்பதை எங்களால் அவதானிக்க முடியும். அந்த விலங்குகள்  எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இலங்கை மக்கள் அவதானமாகவும், பாதுகாப்பாகவும் இருக்குமாறு கேட்டுக்கொலள்ளப்படுகின்றீர்கள். என அவர் மேலும் தெரிவித்துள்ளார்


சூரிய கிரகணத்தின் போது அவதானமாக இருக்க வேண்டுமா பேராசிரியர் பிரதீபராஜா விளக்கம். 2024ம் ஆண்டின் மிகப்பெரிய சூரிய கிரகணம் நடக்கும் மிக முக்கியமான நாள் இன்றாகும். இந்த அரிய நிகழ்வானது கனடா, 15 அமெரிக்க மாநிலங்கள், மெக்ஸிகோ மற்றும் வட அமெரிக்கா உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் 4 மணித்தியாலம் 28 நிமிடங்கள் வரை நீடிக்கும்  என்று மதிப்பிடப்பட்டுள்ளது. முழு சூரிய கிரகணம் என்பது அரிதான நிகழ்வு என்று நாசா தெரிவித்துள்ளது. இந்த சூரிய கிரகணத்தில் விசேடம் என்னவென்றால், அடுத்த 20 வருடங்களுக்கு இப்படியொரு சூரிய கிரகணம் நடக்காது என்பதே. இது தொடர்பாக யாழ் புவியியற்துறை பேராசிரியர்.பிரதீபராஜா  தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் இன்றைய தினம் (08) சூரிய கிரகணம் ஒன்று இடம்பெறுவதற்கு  வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. பொதுவாக 18 மாதங்களுக்கு ஒரு தடவை புவியானது தனது சுற்று வட்ட பாதையில் சூரியனை சுற்றி வருகிற போது சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் வருவதே சூரிய கிரகணம் என்று அழைப்போம். இன்றைய தினம் (08) சூரிய கிரகணமானது இலங்கை நேரப்படி இரவு 10:33 மணி முதல் அதிகாலை 2:22 வரை இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. பொதுவாக நீண்ட காலப்பகுதியில் இந்த சூரிய கிரகணம் நிகழ்வதால்,  50 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்கின்ற ஒரு சூரிய கிரகணமாக இந்நிகழ்வு கருதப்படுகிறது.இந்த சூரிய கிரகணத்தை இலங்கையில் உள்ளவர்கள் நேரடியாக பார்ப்பதற்கு வாய்ப்புக்கள் குறைவு. சூரிய கிரகணம் ஆரம்பிக்கும் நேரம் மெக்ஸிகோ மக்கள் சூரிய கிரகணத்தை பார்ப்பார்கள். பின்னர் கனடா மக்கள் சூரிய கிரகணத்தை இறுதியாக பார்ப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இந்த சூரிய கிரகணத்தால் நேரடியாக பாதிப்புக்கள் இல்லாவிடடாலும் கூட, சூரிய கிரகணத்தின் போது   உண்பதையோ, வெளியில் நடமாடுவதையோ எமது முன்னோர்கள் விரும்புவதில்லை. இதற்கு காரணம் பல உயிரினங்கள் சூரிய கிரகணத்தின் போது தங்களது நடத்தைகளை மாற்றிக்கொள்கின்றன. குறிப்பாக இந்த சூரிய கிரகணத்தின் போது ஏற்படும் கதிர்வீச்சு காரணமாக அல்லது இருட்டின் காரணமாக விலங்குகள் தங்களது நடத்தைகளை மாற்றிக்கொள்கின்றன. இந்த காலப்பகுதியில் இந்துக்களின் வழிபாட்டு தலங்களின் கதவுகள் யாவும் பூட்டப்பட்டு வழிபாட்டுக்கு தடை விதிக்கப்படும். அத்துடன் உணவு உண்பதையோ, வெளியில் நடமாடுவதையோ இந்துக்கள் தவிர்ப்பது வழமையாக இருக்கும். இலங்கைக்கு இந்த சூரிய கிரகணம் இடம்பெறும் காலப் பகுதி இருட்டாகவே இருக்கும். ஆகவே விலங்குகள் பதட்டத்தோடும், ஆக்ரோசமாகவும்  இருப்பதை எங்களால் அவதானிக்க முடியும். அந்த விலங்குகள்  எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இலங்கை மக்கள் அவதானமாகவும், பாதுகாப்பாகவும் இருக்குமாறு கேட்டுக்கொலள்ளப்படுகின்றீர்கள். என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Advertisement

Advertisement

Advertisement