• Aug 28 2025

தமிழர்களின் நீதிக்கான கையெழுத்து போராட்டம்; இறுதி நாளான இன்று வவுனியாவில் முன்னெடுப்பு!

shanuja / Aug 27th 2025, 3:09 pm
image

தமிழர்களுக்கு நீதி கோரி ஆரம்பிக்கப்பட்ட கையெழுத்துப் போராட்டம் இறுதிநாளான இன்று வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டது. 


தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்படுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையிடமும் பன்னாட்டு சமூகத்திடமும் நீதி வேண்டி தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களில் மாபெரும் கையெழுத்து போராட்டமானது கடந்த  23ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. 


இந்நிலையில் இறுதி நாளான இன்றையதினம் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த போராட்டமானது  முன்னெடுக்கப்பட்டிருந்தது.


இதன்போது இளைஞர்,யுவதிகள் என பலரும் கலந்து கொண்டு குறித்த  போராட்டத்திற்கு 

ஆதரவாக கையொப்பம் இட்டமையை அவதானிக்க கூடியதாக இருந்தது.


குறித்த போராட்டமானது தாயகச்செயலணி எனும் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழர்களின் நீதிக்கான கையெழுத்து போராட்டம்; இறுதி நாளான இன்று வவுனியாவில் முன்னெடுப்பு தமிழர்களுக்கு நீதி கோரி ஆரம்பிக்கப்பட்ட கையெழுத்துப் போராட்டம் இறுதிநாளான இன்று வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டது. தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்படுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையிடமும் பன்னாட்டு சமூகத்திடமும் நீதி வேண்டி தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களில் மாபெரும் கையெழுத்து போராட்டமானது கடந்த  23ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் இறுதி நாளான இன்றையதினம் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த போராட்டமானது  முன்னெடுக்கப்பட்டிருந்தது.இதன்போது இளைஞர்,யுவதிகள் என பலரும் கலந்து கொண்டு குறித்த  போராட்டத்திற்கு ஆதரவாக கையொப்பம் இட்டமையை அவதானிக்க கூடியதாக இருந்தது.குறித்த போராட்டமானது தாயகச்செயலணி எனும் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement