• Jan 13 2025

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி திருமலையில் கையெழுத்து போராட்டம்..!

Sharmi / Jan 13th 2025, 12:12 pm
image

பலவருடங்களாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரிய கையெழுத்து போராட்டமானது போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில்  திருகோணமலை சிவன் கோயிலடிக்கு முன்பாக இன்று(13) இடம்பெற்றது. 

இதில் பலரும் கலந்து கொண்டு கையெழுத்துக்களை இட்டதுடன், குறித்த கையெழுத்து போராட்டமானது வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்தனர்.

இதன் போது கருத்து தெரிவித்த இராவண சேனா அமைப்பின் தலைவர் கு.செந்தூரன்,

அரசியல் கைதிகள் பல வருட காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் விசாரணைகள் ஊடாக பலரும் விடுவிக்கப்பட்டு மீண்டும் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை புதிய அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும். தமிழ் மக்களின் குரலை கேட்டு அரசாங்கம் செவிசாய்த்து உடனடியாக விடுதலை செய்ய கோரியே இந்த கையெழுத்து போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.

ஐந்து ஆண்டுகள் தொடக்கம் முப்பது ஆண்டுகள் வரை தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை மற்றும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை  இந்த அரசாங்கம் சுதந்திர தினத்தன்றாவது விடுதலை செய்ய வேண்டும். 

ஜனாதிபதி யாழ் மண்ணில் வைத்து தேர்தலின் போது வாக்குறுதி அளித்ததை போன்று பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என ஜனாதிபதி மற்றும் நீதி அமைச்சர் ஆகியோரிடத்தில் கேட்டு கொள்கின்றோம். இந்த கோரிக்கையை சட்டமா அதிபர்,நீதியமைச்சர், ஜனாதிபதியிடமும் கையளிக்கவுள்ளதாகவும் இராவண சேனா அமைப்பின் தலைவர்  தெரிவித்தார்.

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி திருமலையில் கையெழுத்து போராட்டம். பலவருடங்களாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரிய கையெழுத்து போராட்டமானது போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில்  திருகோணமலை சிவன் கோயிலடிக்கு முன்பாக இன்று(13) இடம்பெற்றது. இதில் பலரும் கலந்து கொண்டு கையெழுத்துக்களை இட்டதுடன், குறித்த கையெழுத்து போராட்டமானது வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்தனர்.இதன் போது கருத்து தெரிவித்த இராவண சேனா அமைப்பின் தலைவர் கு.செந்தூரன்,அரசியல் கைதிகள் பல வருட காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் விசாரணைகள் ஊடாக பலரும் விடுவிக்கப்பட்டு மீண்டும் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.இவர்களை புதிய அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும். தமிழ் மக்களின் குரலை கேட்டு அரசாங்கம் செவிசாய்த்து உடனடியாக விடுதலை செய்ய கோரியே இந்த கையெழுத்து போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.ஐந்து ஆண்டுகள் தொடக்கம் முப்பது ஆண்டுகள் வரை தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை மற்றும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை  இந்த அரசாங்கம் சுதந்திர தினத்தன்றாவது விடுதலை செய்ய வேண்டும். ஜனாதிபதி யாழ் மண்ணில் வைத்து தேர்தலின் போது வாக்குறுதி அளித்ததை போன்று பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என ஜனாதிபதி மற்றும் நீதி அமைச்சர் ஆகியோரிடத்தில் கேட்டு கொள்கின்றோம். இந்த கோரிக்கையை சட்டமா அதிபர்,நீதியமைச்சர், ஜனாதிபதியிடமும் கையளிக்கவுள்ளதாகவும் இராவண சேனா அமைப்பின் தலைவர்  தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement