• Nov 24 2024

அணுசக்தி தொழில்நுட்பம் பற்றிய புரிதலை வலுப்படுத்த சிங்கப்பூர் – அமெரிக்கா இடையே ஒப்பந்தம்!

Tamil nila / Jul 31st 2024, 7:44 pm
image

அண்மைய அணுசக்தி தொழில்நுட்பங்கள், அறிவியல் ஆய்வு ஆகியவற்றை அமெரிக்க அமைப்புகளிடமிருந்து கற்றுக்கொள்ள ஏதுவாக, ஜூலை 31ம் திகதியன்று அமெரிக்காவுடன் சிங்கப்பூர் 30 ஆண்டு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.

தூய எரிசக்தியாக அணுசக்தியைப் பயன்படுத்துவது தொடர்பாக கூடுதல் தெளிவான முடிவு எடுக்க இந்நடவடிக்கை சிங்கப்பூருக்கு உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இருப்பினும், சிங்கப்பூரில் அணுசக்தியைப் பயன்படுத்துவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று அவர்கள் தெளிவுபடுத்தினர்.

வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனும் அந்த அணுசக்தி ஒத்துழைப்பில் கையெழுத்திட்டனர்.இது ஓர் அமைதியான அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் என்று அமெரிக்காவின் எரிசக்தி துறை அதன் இணையப்பக்கத்தில் பதிவிட்டது.

அமைச்சர் பிளிங்கன் ஜூலை 30, 31ஆம் திகதிகளில் சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொண்டார்.

அமெரிக்காவிடமிருந்து மற்ற நாடுகள் அணுசக்தி தொடர்பான பொருள்கள் அல்லது சாதனங்களைப் பெற 24 ஒப்பந்தங்களை அமெரிக்கா நடைமுறைப்படுத்தியுள்ளது.இதற்கிடையே, சிங்கப்பூரில் அணுசக்தியைப் பயன்படுத்துவது எந்த அளவுக்குப் பாதுகாப்பானது என்பதை விரிவாக ஆராய்ந்த பிறகு அதுகுறித்து முடிவெடுக்கப்படும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சும் வர்த்தக, தொழில் அமைச்சும் ஜூலை 31ஆம் திகதியன்று தெரிவித்தன.

நம்பகத்தன்மை, கட்டுப்படியான விலை, சுற்றுப்புறம் ரீதியான நீடித்த நிலைத்தன்மை ஆகியவை குறித்து ஆராயப்படும் என்று அமைச்சுகள் கூறின.

2050ஆம் ஆண்டுக்குள் கரிம வெளியேற்றம் அறவே இல்லாத நிலையை எட்ட வேண்டும் எனப் பல நாடுகள் இலக்கு கொண்டுள்ளன.இதன் காரணமாகவே அணுசக்தியின் பக்கம் பல நாடுகளின் கவனம் திரும்பியுள்ளது.

தென் கிழக்காசியாவைப் பொறுத்தவரை, அணுசக்தியைப் பயன்படுத்துவது குறித்து மலேசியா, இந்தோனீசியா, வியட்னாம், பிலிப்பீன்ஸ், தாய்லாந்து ஆகிய நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன.

அணுசக்தி தொழில்நுட்பம் பற்றிய புரிதலை வலுப்படுத்த சிங்கப்பூர் – அமெரிக்கா இடையே ஒப்பந்தம் அண்மைய அணுசக்தி தொழில்நுட்பங்கள், அறிவியல் ஆய்வு ஆகியவற்றை அமெரிக்க அமைப்புகளிடமிருந்து கற்றுக்கொள்ள ஏதுவாக, ஜூலை 31ம் திகதியன்று அமெரிக்காவுடன் சிங்கப்பூர் 30 ஆண்டு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.தூய எரிசக்தியாக அணுசக்தியைப் பயன்படுத்துவது தொடர்பாக கூடுதல் தெளிவான முடிவு எடுக்க இந்நடவடிக்கை சிங்கப்பூருக்கு உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இருப்பினும், சிங்கப்பூரில் அணுசக்தியைப் பயன்படுத்துவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று அவர்கள் தெளிவுபடுத்தினர்.வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனும் அந்த அணுசக்தி ஒத்துழைப்பில் கையெழுத்திட்டனர்.இது ஓர் அமைதியான அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் என்று அமெரிக்காவின் எரிசக்தி துறை அதன் இணையப்பக்கத்தில் பதிவிட்டது.அமைச்சர் பிளிங்கன் ஜூலை 30, 31ஆம் திகதிகளில் சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொண்டார்.அமெரிக்காவிடமிருந்து மற்ற நாடுகள் அணுசக்தி தொடர்பான பொருள்கள் அல்லது சாதனங்களைப் பெற 24 ஒப்பந்தங்களை அமெரிக்கா நடைமுறைப்படுத்தியுள்ளது.இதற்கிடையே, சிங்கப்பூரில் அணுசக்தியைப் பயன்படுத்துவது எந்த அளவுக்குப் பாதுகாப்பானது என்பதை விரிவாக ஆராய்ந்த பிறகு அதுகுறித்து முடிவெடுக்கப்படும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சும் வர்த்தக, தொழில் அமைச்சும் ஜூலை 31ஆம் திகதியன்று தெரிவித்தன.நம்பகத்தன்மை, கட்டுப்படியான விலை, சுற்றுப்புறம் ரீதியான நீடித்த நிலைத்தன்மை ஆகியவை குறித்து ஆராயப்படும் என்று அமைச்சுகள் கூறின.2050ஆம் ஆண்டுக்குள் கரிம வெளியேற்றம் அறவே இல்லாத நிலையை எட்ட வேண்டும் எனப் பல நாடுகள் இலக்கு கொண்டுள்ளன.இதன் காரணமாகவே அணுசக்தியின் பக்கம் பல நாடுகளின் கவனம் திரும்பியுள்ளது.தென் கிழக்காசியாவைப் பொறுத்தவரை, அணுசக்தியைப் பயன்படுத்துவது குறித்து மலேசியா, இந்தோனீசியா, வியட்னாம், பிலிப்பீன்ஸ், தாய்லாந்து ஆகிய நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன.

Advertisement

Advertisement

Advertisement