• Nov 23 2024

இனவாதத்தை வெறுக்கும் சிங்கள மக்கள்! அரசியல் கட்சிகளாலே இந்த நிலை! நீதி அமைச்சர் சுட்டிக்காட்டு

Chithra / Jan 9th 2024, 6:10 pm
image

 

இலங்கை வாழ் சிங்கள் மக்கள் முரண்பாடுகளை எதிர்ப்பதாவும் இனவாதத்தை வெறுப்பதாகவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தேசிய ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்துக்குமான அலுவலக சட்டமூலம் தொடர்பான இன்றைய நாடாளுமன்ற விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இலங்கையில் தேசிய ஒற்றுமைய கட்டியெழுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படும் போது, அதனை இல்லாமல் செய்வதற்கு பல சதித்திட்டங்கள் தீட்டப்படுகின்றன.

சிலர் இனவாதத்தை தூண்ட முயற்சிக்கின்றனர். அவர்கள் இனவாதம் எனும் விடயத்தை பிராணவாயுவாக (oxygen) கருதுகிறார்கள். அது இன்றி அவர்களால் வாழ முடியாது.

தற்போதுள்ள அரசியல் கட்சிகளும் ஜனநாயகத்தை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டவை அல்ல. அவை இனவாதத்தை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டவை. பெயரில் கூட தற்போது அரசியல் கட்சிகள் இனவாதத்தை தூண்ட முயற்சிக்கிறது.

இந்த நிலையில், எவ்வாறு நாம் ஜனநாயகத்தை நிலைநாட்டுவது? எமது நாட்டில் உள்ள இந்த நிலை மாற வேண்டும். இனம், மதம் மற்றும் மொழியை தாண்டி, ஜனநாயகத்தை நிலைநாட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

தேசிய ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்துக்குமான அலுவலக சட்டமூலம் இலங்கைக்கு புதிதல்ல. இலங்கை தற்போது பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. முன்னாள் ஆட்சியாளர்களால் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட தவறான தீர்மானங்கள் காரணமாக இந்த நிலை ஏற்பட்டது.

அத்துடன், இன, மத மற்றும் மொழியை அடிப்படையாக கொண்டு ஏற்பட்ட இனக்கலவரங்கள் காரணமாக நெருக்கடி நிலை மேலும் தீவிரமடைந்தது. இதனால் இலங்கையின் தேசிய ஒற்றுமை பாரியளவில் பாதிக்கப்பட்டது.

இந்த பின்னணியில், தற்போது இலங்கைக்கு தேசிய ஒற்றுமை என்பது இன்றியமையாத ஒன்றாகும். நாட்டுக்கு மாத்திரம் அல்ல. நாடாளுமன்றத்துக்குள்ளும் ஒற்றுமை தேவை. எனக் குறிப்பிட்டுள்ளார்.  

இனவாதத்தை வெறுக்கும் சிங்கள மக்கள் அரசியல் கட்சிகளாலே இந்த நிலை நீதி அமைச்சர் சுட்டிக்காட்டு  இலங்கை வாழ் சிங்கள் மக்கள் முரண்பாடுகளை எதிர்ப்பதாவும் இனவாதத்தை வெறுப்பதாகவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.தேசிய ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்துக்குமான அலுவலக சட்டமூலம் தொடர்பான இன்றைய நாடாளுமன்ற விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.இலங்கையில் தேசிய ஒற்றுமைய கட்டியெழுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படும் போது, அதனை இல்லாமல் செய்வதற்கு பல சதித்திட்டங்கள் தீட்டப்படுகின்றன.சிலர் இனவாதத்தை தூண்ட முயற்சிக்கின்றனர். அவர்கள் இனவாதம் எனும் விடயத்தை பிராணவாயுவாக (oxygen) கருதுகிறார்கள். அது இன்றி அவர்களால் வாழ முடியாது.தற்போதுள்ள அரசியல் கட்சிகளும் ஜனநாயகத்தை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டவை அல்ல. அவை இனவாதத்தை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டவை. பெயரில் கூட தற்போது அரசியல் கட்சிகள் இனவாதத்தை தூண்ட முயற்சிக்கிறது.இந்த நிலையில், எவ்வாறு நாம் ஜனநாயகத்தை நிலைநாட்டுவது எமது நாட்டில் உள்ள இந்த நிலை மாற வேண்டும். இனம், மதம் மற்றும் மொழியை தாண்டி, ஜனநாயகத்தை நிலைநாட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.தேசிய ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்துக்குமான அலுவலக சட்டமூலம் இலங்கைக்கு புதிதல்ல. இலங்கை தற்போது பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. முன்னாள் ஆட்சியாளர்களால் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட தவறான தீர்மானங்கள் காரணமாக இந்த நிலை ஏற்பட்டது.அத்துடன், இன, மத மற்றும் மொழியை அடிப்படையாக கொண்டு ஏற்பட்ட இனக்கலவரங்கள் காரணமாக நெருக்கடி நிலை மேலும் தீவிரமடைந்தது. இதனால் இலங்கையின் தேசிய ஒற்றுமை பாரியளவில் பாதிக்கப்பட்டது.இந்த பின்னணியில், தற்போது இலங்கைக்கு தேசிய ஒற்றுமை என்பது இன்றியமையாத ஒன்றாகும். நாட்டுக்கு மாத்திரம் அல்ல. நாடாளுமன்றத்துக்குள்ளும் ஒற்றுமை தேவை. எனக் குறிப்பிட்டுள்ளார்.  

Advertisement

Advertisement

Advertisement