• Sep 20 2024

ரணிலால் அதிகம் பாதிக்கப்பட போவது சிங்களவர்களே...!எதிராக வாக்களியுங்கள்...!வலுக்கும் கோரிக்கை.!samugammedia

Sharmi / Apr 24th 2023, 4:20 pm
image

Advertisement

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் மூலம் தமிழர்களை விடவும் சிங்களவர்களே அதிகம் பாதிக்கப்படவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற  உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

நாளையதினம் இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு ஆதரவு கோரி வவுனியாவில், துண்டுபிரசுரம் வழங்கிய பின்னர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.

புதிய பயங்கரவாத சட்டத்துக்கு எதிராக முழுமையான ஒத்துழைப்பை வழங்குங்கள். இதுவரை காலமும் தமிழ் மக்கள்தான் இந்த பயங்கரவாத தடை சட்டத்தினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.  

இனியும் பாதிக்கப்படக்கூடிய நிலைமை இருக்கிறது. அதைவிட இனிவரும் காலத்தில் தெற்கிலே இருக்கக்கூடிய சிங்கள முற்போக்கு சிவில் சமூகத்தை சேர்ந்தவர்கள்,

மாணவர்கள் இந்த புதிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தினால் மிக மோசமாக பாதிக்கப்பட இருக்கிறார்கள்.

ஆகவே தமிழ் மக்கள் இதுவரை காலமும் பயங்கரவாத தடைச் சட்டத்தால் எந்தளவு தூரம் பாதிக்கப்பட்டார்களோ அதைவிட மோசமான அளவுக்கு தெற்கில் இருக்கக்கூடிய சிங்களவர்களும் பாதிக்கப்பட இருக்கிறபடியால்,தமிழ், சிங்கள, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்க்க வேண்டும். பயங்கரவாத தடை சட்டம் நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக வாக்களிக்க வேண்டும்.

அத்துடன் வடக்கு கிழக்கிலே நடைபெறுகின்ற பௌத்தமயமாக்கல், ஆலயங்கள் இடிப்பது அல்லது பௌத்த சிலைகளை நிறுவுவது போன்ற அனைத்து விடயங்களுக்காகவும், நாளையதினம் இந்த பூரணமான கடையடைப்புக்கு பொதுமக்கள், பொது அமைப்புக்கள், அரச, அரசசார்பற்ற நிறுவனங்கள் முழுமையான ஒத்துழைப்பை, ஆதரவை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

ரணிலால் அதிகம் பாதிக்கப்பட போவது சிங்களவர்களே.எதிராக வாக்களியுங்கள்.வலுக்கும் கோரிக்கை.samugammedia புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் மூலம் தமிழர்களை விடவும் சிங்களவர்களே அதிகம் பாதிக்கப்படவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற  உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.நாளையதினம் இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு ஆதரவு கோரி வவுனியாவில், துண்டுபிரசுரம் வழங்கிய பின்னர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.புதிய பயங்கரவாத சட்டத்துக்கு எதிராக முழுமையான ஒத்துழைப்பை வழங்குங்கள். இதுவரை காலமும் தமிழ் மக்கள்தான் இந்த பயங்கரவாத தடை சட்டத்தினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.  இனியும் பாதிக்கப்படக்கூடிய நிலைமை இருக்கிறது. அதைவிட இனிவரும் காலத்தில் தெற்கிலே இருக்கக்கூடிய சிங்கள முற்போக்கு சிவில் சமூகத்தை சேர்ந்தவர்கள், மாணவர்கள் இந்த புதிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தினால் மிக மோசமாக பாதிக்கப்பட இருக்கிறார்கள். ஆகவே தமிழ் மக்கள் இதுவரை காலமும் பயங்கரவாத தடைச் சட்டத்தால் எந்தளவு தூரம் பாதிக்கப்பட்டார்களோ அதைவிட மோசமான அளவுக்கு தெற்கில் இருக்கக்கூடிய சிங்களவர்களும் பாதிக்கப்பட இருக்கிறபடியால்,தமிழ், சிங்கள, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்க்க வேண்டும். பயங்கரவாத தடை சட்டம் நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக வாக்களிக்க வேண்டும்.அத்துடன் வடக்கு கிழக்கிலே நடைபெறுகின்ற பௌத்தமயமாக்கல், ஆலயங்கள் இடிப்பது அல்லது பௌத்த சிலைகளை நிறுவுவது போன்ற அனைத்து விடயங்களுக்காகவும், நாளையதினம் இந்த பூரணமான கடையடைப்புக்கு பொதுமக்கள், பொது அமைப்புக்கள், அரச, அரசசார்பற்ற நிறுவனங்கள் முழுமையான ஒத்துழைப்பை, ஆதரவை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement