• Jul 03 2024

எரிபொருட்களின் விலைகளை திருத்தியது சினோபெக் நிறுவனம்...!

Chithra / Jul 1st 2024, 8:01 am
image

Advertisement

 

சினோபெக் நிறுவனமும் இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை திருத்தியுள்ளன.

இதன்படி 355 ரூபாயாக காணப்பட்ட 92 ரக  ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 11 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 344 ரூபாவாகும்.

420 ரூபாயாக நிலவிய ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 41 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 379 ரூபாவாகும்.

377  ரூபாயக காணப்பட்ட  லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன்  லீற்றர் ஒன்றின் விலை 22 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 355 ரூபாவாகும்.

ஓட்டோ டீசலின் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாது லீற்றர் 314 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்தியுள்ளது.

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இந்த எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலை திருத்தத்திற்கு சமாந்திரமாக ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருட்களின் விலைகளை திருத்தம் செய்ய தீர்மானித்துள்ளது.


எரிபொருட்களின் விலைகளை திருத்தியது சினோபெக் நிறுவனம்.  சினோபெக் நிறுவனமும் இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை திருத்தியுள்ளன.இதன்படி 355 ரூபாயாக காணப்பட்ட 92 ரக  ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 11 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 344 ரூபாவாகும்.420 ரூபாயாக நிலவிய ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 41 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 379 ரூபாவாகும்.377  ரூபாயக காணப்பட்ட  லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன்  லீற்றர் ஒன்றின் விலை 22 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 355 ரூபாவாகும்.ஓட்டோ டீசலின் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாது லீற்றர் 314 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.இதேவேளை நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்தியுள்ளது.மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இந்த எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதேவேளை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலை திருத்தத்திற்கு சமாந்திரமாக ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருட்களின் விலைகளை திருத்தம் செய்ய தீர்மானித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement