• Nov 25 2024

மின்னல் தாக்கி தங்கை பரிதாப மரணம்; அண்ணன் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில்!

Chithra / Nov 1st 2024, 7:31 am
image

 

பதுளை - பசறையில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி 11 வயது சிறுமி ஒருவர்  உயிரிழந்துள்ளார்.

பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அம்பத்தன்ன பகுதியில் நேற்று குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.

குறித்த பகுதியில் வீடு கட்டுவதற்காக வெட்டி வைக்கப்பட்டிருந்த தளத்தில், மண்வெட்டியுடன் சகோதரனும் சகோதரியும் நின்று கொண்டிருந்த வேளையில் மின்னல் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து குறித்த இருவரும் பசறை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது 11 வயதுடைய சிறுமி உயிரிழந்துள்ளதாகவும், 17 வயதுடைய சகோதரன் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சிறுமியின் சடலம் தற்போது பசறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில்  இலங்கையில்  கடும் இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என பல மாகாணங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ஊவா, கிழக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் பல இடங்களில் கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.


மின்னல் தாக்கி தங்கை பரிதாப மரணம்; அண்ணன் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில்  பதுளை - பசறையில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி 11 வயது சிறுமி ஒருவர்  உயிரிழந்துள்ளார்.பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அம்பத்தன்ன பகுதியில் நேற்று குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.குறித்த பகுதியில் வீடு கட்டுவதற்காக வெட்டி வைக்கப்பட்டிருந்த தளத்தில், மண்வெட்டியுடன் சகோதரனும் சகோதரியும் நின்று கொண்டிருந்த வேளையில் மின்னல் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதையடுத்து குறித்த இருவரும் பசறை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது 11 வயதுடைய சிறுமி உயிரிழந்துள்ளதாகவும், 17 வயதுடைய சகோதரன் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மேலும், சிறுமியின் சடலம் தற்போது பசறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில்  இலங்கையில்  கடும் இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என பல மாகாணங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஊவா, கிழக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் பல இடங்களில் கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement