• Oct 17 2024

சீதாஎலிய சீதையம்மன் ஆலய கும்பாபிஷேகத்துக்கான சீர்வரிசை பொருட்கள் எடுத்துச்செல்லப்பட்டது

Tharun / May 17th 2024, 6:02 pm
image

Advertisement

சீதாஎலிய சீதையம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகப் பெருவிழாவிற்கான  சீர்வரிசை பொருட்களை தீர்த்த ஊர்வலமாக எடுத்துச் செல்லும் பூஜை வழிபாடுகள் இன்று(17) காலை கொழும்பு மயூரபதி ஆலயத்தில் இடம்பெற்றது. 


நுவரேலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலய பரிபாலன சபை தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான  வீ. இராதாகிருஷ்ணன், மயூரபதி ஆலய அறங்காவலர் சபைத் தலைவர்  பெரியசாமி சுந்தரலிங்கம் ஆகியோரின் விசேட அழைப்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்   சஜித் பிரேமதாச, அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


இந்தியாவின் அயோத்தி ராமர் கோயில் மற்றும் சீதை பிறந்த இடமான நேபாளம் ஆகிய இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட சீர்வரிசை பொருட்கள், கோயம்புத்தூரில் இருந்து கொண்டுவரப்பட்ட கலசங்கள் மற்றும் இந்திய புண்ணிய நதிகளின் தீர்த்தம் ஆகியன மயூரபதி ஆலயத்தில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை (17) காலை தீர்த்த ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.


சீதாஎலிய சீதையம்மன் ஆலய கும்பாபிஷேகத்துக்கான சீர்வரிசை பொருட்கள் எடுத்துச்செல்லப்பட்டது சீதாஎலிய சீதையம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகப் பெருவிழாவிற்கான  சீர்வரிசை பொருட்களை தீர்த்த ஊர்வலமாக எடுத்துச் செல்லும் பூஜை வழிபாடுகள் இன்று(17) காலை கொழும்பு மயூரபதி ஆலயத்தில் இடம்பெற்றது. நுவரேலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலய பரிபாலன சபை தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான  வீ. இராதாகிருஷ்ணன், மயூரபதி ஆலய அறங்காவலர் சபைத் தலைவர்  பெரியசாமி சுந்தரலிங்கம் ஆகியோரின் விசேட அழைப்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்   சஜித் பிரேமதாச, அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.இந்தியாவின் அயோத்தி ராமர் கோயில் மற்றும் சீதை பிறந்த இடமான நேபாளம் ஆகிய இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட சீர்வரிசை பொருட்கள், கோயம்புத்தூரில் இருந்து கொண்டுவரப்பட்ட கலசங்கள் மற்றும் இந்திய புண்ணிய நதிகளின் தீர்த்தம் ஆகியன மயூரபதி ஆலயத்தில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை (17) காலை தீர்த்த ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement