• Nov 26 2024

இலங்கையின் ஆறு மாவட்டங்கள் அபாயத்தில்..! - நோய் பரவல் தொடர்பில் எச்சரிக்கை

Chithra / Jun 27th 2024, 8:02 am
image

 

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோய் பரவக்கூடிய அபாயம் அதிகரித்துள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்தில் கம்பஹா, கொழும்பு ஆகிய மாவட்டங்களிலிருந்து அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் அறிக்கை  சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி, கம்பஹா, களுத்துறை, கண்டி, இரத்தினபுரி, குருநாகல், காலி ஆகிய மாவட்டங்கள் டெங்கு நோய் அபாயமிக்க மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனால், பொதுமக்கள் அனைவரும் தங்களது சுற்றுச்சூழலைச் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்குமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.


இலங்கையின் ஆறு மாவட்டங்கள் அபாயத்தில். - நோய் பரவல் தொடர்பில் எச்சரிக்கை  நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோய் பரவக்கூடிய அபாயம் அதிகரித்துள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.மேல் மாகாணத்தில் கம்பஹா, கொழும்பு ஆகிய மாவட்டங்களிலிருந்து அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் அறிக்கை  சுட்டிக்காட்டியுள்ளது.அதன்படி, கம்பஹா, களுத்துறை, கண்டி, இரத்தினபுரி, குருநாகல், காலி ஆகிய மாவட்டங்கள் டெங்கு நோய் அபாயமிக்க மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.இதனால், பொதுமக்கள் அனைவரும் தங்களது சுற்றுச்சூழலைச் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்குமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement