• May 19 2024

உலக சாதனை படைத்த ஸ்கேட்டிங் வீராங்கனை: குவியும் பாராட்டுக்கள்!

Sharmi / Jan 24th 2023, 12:45 pm
image

Advertisement

அதிவேக தனிநபர் ஸ்கேட்டிங் மராத்தானில். சென்னையைச் சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் மாணவி ஏ.ஜே.ரபியா சக்கியா, குறைவான கால அவகாசத்தில் ஓடி உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.

இவரது சாதனையை ’இந்தியன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்’ (INDIAN BOOK OF WORDL RECORD) அங்கீகரித்து, அவருக்கு உலக சாதனை பட்டத்தை வழங்கி கெளரவித்துள்ளது.

இன்றைய சூழலில் உலகளவில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டு, அவை உலக சாதனைக்கான புத்தகத்தில் இடம்பெற்று வருகிறது.

அந்த வகையில் ஸ்கேட்டிங் எனப்படும் காலில் சக்கரங்களைக் கட்டிக்கொண்டு சாலை மார்க்கமாக சறுக்கிச் செல்லும் விளையாட்டில், தனி நபர் சாதனையை சென்னை மாணவி ஒருவர் நிகழ்த்தியிருக்கிறார்.

சென்னையில் தனியார் பாடசாலையில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவி ஏ.ஜே.ரபியா சக்கியா, தனிநபர் அதிவிரைவு ஸ்கேட்டிங் விளையாட்டில், அதிவேக தனிநபர் ஸ்கேட்டிங் மராத்தானில் உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.

அவர் 44 கி.மீ தூரத்தை 1 மணி நேரம் 44 நிமிடங்களுக்குள் கடந்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். இவரது சாதனையை ’இந்தியன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்’ (INDIAN BOOK OF WORDL RECORD) அங்கீகரித்து அவருக்கு உலக சாதனை பட்டத்தை வழங்கி கெளரவித்துள்ளது.

இந்த சாதனை நிகழ்வு சென்னையின் புறநகர் பகுதியான வண்டலூர் அருகே உள்ள வயலூர் சாலையில் நேற்று அதிகாலை 4 30 மணியளவில் நடைபெற்றது. வழக்கத்தை விட பனி  பெய்து, காலநிலை பெரிதும் சவாலாக இருந்த நிலையிலும், மாணவி ரஃபியா விடா முயற்சி செய்து இத்தகைய கடினமான சாதனையை வெற்றிகரமாக நிறைவு செய்ததை நிபுணர்கள் பாராட்டியிருக்கிறார்கள். 

இது தொடர்பாக மாணவி ரஃபியா பேசுகையில்,

“மெரினா கடற்கரைக்கு சென்ற போது சிறுவர்கள் ஸ்கேட்டிங் செய்ததை பார்த்து எமக்கும் அதன் மீது ஆர்வம் ஏற்பட்டது. பிறகு எம்முடைய விருப்பத்தை கேட்டந்த பெற்றோர்கள், எம்மை ஸ்கேட்டிங் வகுப்புக்கு அனுப்பினார்கள்.

அவர்கள் கொடுத்த ஒத்துழைப்பு மற்றும் பயிற்சியாளர் டோனா சதிஷ் ராஜா அளித் பிரத்யேக பயிற்சி ஆகியவற்றால் ஸ்கேட்டிங் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அதிலும்  உலக சாதனை செய்ய வேண்டும் என்பது கனவாக இருந்தது.

என் கனவை நனவாக்க எம்முடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பயிற்சியாளர் எமக்கு உறுதுணையாக இருந்தனர். இப்போது உலக சாதனை நிகழ்த்தியிருப்பது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் பல சாதனைகளை நிகழ்த்துவதே என் எதிர்காலம் லட்சியம்.” என்றார்.


உலக சாதனை படைத்த ஸ்கேட்டிங் வீராங்கனை: குவியும் பாராட்டுக்கள் அதிவேக தனிநபர் ஸ்கேட்டிங் மராத்தானில். சென்னையைச் சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் மாணவி ஏ.ஜே.ரபியா சக்கியா, குறைவான கால அவகாசத்தில் ஓடி உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.இவரது சாதனையை ’இந்தியன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்’ (INDIAN BOOK OF WORDL RECORD) அங்கீகரித்து, அவருக்கு உலக சாதனை பட்டத்தை வழங்கி கெளரவித்துள்ளது.இன்றைய சூழலில் உலகளவில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டு, அவை உலக சாதனைக்கான புத்தகத்தில் இடம்பெற்று வருகிறது. அந்த வகையில் ஸ்கேட்டிங் எனப்படும் காலில் சக்கரங்களைக் கட்டிக்கொண்டு சாலை மார்க்கமாக சறுக்கிச் செல்லும் விளையாட்டில், தனி நபர் சாதனையை சென்னை மாணவி ஒருவர் நிகழ்த்தியிருக்கிறார்.சென்னையில் தனியார் பாடசாலையில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவி ஏ.ஜே.ரபியா சக்கியா, தனிநபர் அதிவிரைவு ஸ்கேட்டிங் விளையாட்டில், அதிவேக தனிநபர் ஸ்கேட்டிங் மராத்தானில் உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.அவர் 44 கி.மீ தூரத்தை 1 மணி நேரம் 44 நிமிடங்களுக்குள் கடந்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். இவரது சாதனையை ’இந்தியன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்’ (INDIAN BOOK OF WORDL RECORD) அங்கீகரித்து அவருக்கு உலக சாதனை பட்டத்தை வழங்கி கெளரவித்துள்ளது.இந்த சாதனை நிகழ்வு சென்னையின் புறநகர் பகுதியான வண்டலூர் அருகே உள்ள வயலூர் சாலையில் நேற்று அதிகாலை 4 30 மணியளவில் நடைபெற்றது. வழக்கத்தை விட பனி  பெய்து, காலநிலை பெரிதும் சவாலாக இருந்த நிலையிலும், மாணவி ரஃபியா விடா முயற்சி செய்து இத்தகைய கடினமான சாதனையை வெற்றிகரமாக நிறைவு செய்ததை நிபுணர்கள் பாராட்டியிருக்கிறார்கள். இது தொடர்பாக மாணவி ரஃபியா பேசுகையில்,“மெரினா கடற்கரைக்கு சென்ற போது சிறுவர்கள் ஸ்கேட்டிங் செய்ததை பார்த்து எமக்கும் அதன் மீது ஆர்வம் ஏற்பட்டது. பிறகு எம்முடைய விருப்பத்தை கேட்டந்த பெற்றோர்கள், எம்மை ஸ்கேட்டிங் வகுப்புக்கு அனுப்பினார்கள்.அவர்கள் கொடுத்த ஒத்துழைப்பு மற்றும் பயிற்சியாளர் டோனா சதிஷ் ராஜா அளித் பிரத்யேக பயிற்சி ஆகியவற்றால் ஸ்கேட்டிங் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அதிலும்  உலக சாதனை செய்ய வேண்டும் என்பது கனவாக இருந்தது.என் கனவை நனவாக்க எம்முடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பயிற்சியாளர் எமக்கு உறுதுணையாக இருந்தனர். இப்போது உலக சாதனை நிகழ்த்தியிருப்பது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் பல சாதனைகளை நிகழ்த்துவதே என் எதிர்காலம் லட்சியம்.” என்றார்.

Advertisement

Advertisement

Advertisement