• Nov 22 2024

இமய மலையின் 16,500 அடி உயரத்தில் எலும்புக்கூடுகளின் ஏரி கண்டுபிடிப்பு!

Tamil nila / Jul 2nd 2024, 9:56 pm
image

இமய மலையின் 16,500 அடி உயரத்தில் காணப்படும் ஒரு ஏரி, எலும்புக்கூடுகளின் ஏரி என்றே அழைக்கப்படுகிறது. 

எதற்காக அந்த ஏரிக்கரையில் ஏராளமான எலும்புக் கூடுகள் காணப்படுகின்றன. அவ்வளவு உயரத்தில் அத்தனை எலும்புக்கூடுகள் எப்படி வந்தன என்பது யாருக்கும் உறுதியாகத் தெரியவில்லை.

மேலும் நேபாள எல்லையில், இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில், Roopkund ஏரி என்னும் ஏரி உள்ளது. 1942ஆம் ஆண்டு, அப்பகுதிக்குச் சென்ற பிரித்தானிய வனத்துறை அலுவலர் ஒருவர், அந்த ஏரிக்கரையில் ஒரு அதிரவைக்கும் காட்சியைக் கண்டார்.

ஆம், அங்கே, அந்த ஏரிக்கரையில், சுமார் 800 எலும்புக்கூடுகள் கிடந்துள்ளன. இன்று வரை, அவ்வளவு உயரத்தில் அந்த எலும்புக்கூடுகள் எப்படி வந்தன என்பதை விளக்க யாருமில்லை.

அப்படி எலும்புக்கூடுகள் நிறைந்துகிடப்பதால், Roopkund ஏரி எலும்புக்கூடுகளின் ஏரி என்றே அழைக்கப்படுகிறது.

குறிப்பாக அந்த எலும்புகள் எப்படி அங்கு வந்தன என்பது குறித்து, பலரும் பலவிதமாகக் கூறுகிறார்கள். பல புராணக் கதைகளும் கூறப்படுகின்றன.

மேலும் கன்னோஜ் வம்ச மன்னரான ஜஸ்தவால் என்பவர், கர்ப்பிணியான தன் மனைவியையும், தனது நாட்டியக்காரிகளையும் அழைத்துக்கொண்டு Roopkund இலுள்ள, அயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த நந்தா தேவி கோவிலுக்குச் சென்றதாகவும், வழியில் அவர்கள் புயலில் சிக்கி மாண்டதாகவும், இந்த எலும்புக்கூடுகள் அவர்களுடையவைதான் என்றும் சிலர் கூறுகிறார்கள்.


இமய மலையின் 16,500 அடி உயரத்தில் எலும்புக்கூடுகளின் ஏரி கண்டுபிடிப்பு இமய மலையின் 16,500 அடி உயரத்தில் காணப்படும் ஒரு ஏரி, எலும்புக்கூடுகளின் ஏரி என்றே அழைக்கப்படுகிறது. எதற்காக அந்த ஏரிக்கரையில் ஏராளமான எலும்புக் கூடுகள் காணப்படுகின்றன. அவ்வளவு உயரத்தில் அத்தனை எலும்புக்கூடுகள் எப்படி வந்தன என்பது யாருக்கும் உறுதியாகத் தெரியவில்லை.மேலும் நேபாள எல்லையில், இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில், Roopkund ஏரி என்னும் ஏரி உள்ளது. 1942ஆம் ஆண்டு, அப்பகுதிக்குச் சென்ற பிரித்தானிய வனத்துறை அலுவலர் ஒருவர், அந்த ஏரிக்கரையில் ஒரு அதிரவைக்கும் காட்சியைக் கண்டார்.ஆம், அங்கே, அந்த ஏரிக்கரையில், சுமார் 800 எலும்புக்கூடுகள் கிடந்துள்ளன. இன்று வரை, அவ்வளவு உயரத்தில் அந்த எலும்புக்கூடுகள் எப்படி வந்தன என்பதை விளக்க யாருமில்லை.அப்படி எலும்புக்கூடுகள் நிறைந்துகிடப்பதால், Roopkund ஏரி எலும்புக்கூடுகளின் ஏரி என்றே அழைக்கப்படுகிறது.குறிப்பாக அந்த எலும்புகள் எப்படி அங்கு வந்தன என்பது குறித்து, பலரும் பலவிதமாகக் கூறுகிறார்கள். பல புராணக் கதைகளும் கூறப்படுகின்றன.மேலும் கன்னோஜ் வம்ச மன்னரான ஜஸ்தவால் என்பவர், கர்ப்பிணியான தன் மனைவியையும், தனது நாட்டியக்காரிகளையும் அழைத்துக்கொண்டு Roopkund இலுள்ள, அயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த நந்தா தேவி கோவிலுக்குச் சென்றதாகவும், வழியில் அவர்கள் புயலில் சிக்கி மாண்டதாகவும், இந்த எலும்புக்கூடுகள் அவர்களுடையவைதான் என்றும் சிலர் கூறுகிறார்கள்.

Advertisement

Advertisement

Advertisement