சருமத்தை வெண்மையாக்குவதாகக் கூறப்படும் தரமற்ற ஊசி மருந்துகளுக்காகப் பயன்படுத்தப்படும் பல்வகையான மூலப்பொருட்களைக் கைப்பற்றியுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் கொழும்பு புறக்கோட்டை இரண்டாம் குறுக்குதெரு பகுதியில் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போது சில வர்த்தக நிலையங்களிலிருந்து இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த சோதனை நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், இதற்குச் சுகாதார அமைச்சு ஆதரவு வழங்கியுள்ளது.
மேலும், சருமத்தை வெண்மையாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் ஆபத்தான பல அழகு சாதனப் பொருட்கள் கைப்பற்றுள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
சருமத்தை வெண்மையாக்கப் பயன்படுத்தும் ஊசி மருந்துகள் பறிமுதல் சருமத்தை வெண்மையாக்குவதாகக் கூறப்படும் தரமற்ற ஊசி மருந்துகளுக்காகப் பயன்படுத்தப்படும் பல்வகையான மூலப்பொருட்களைக் கைப்பற்றியுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் கொழும்பு புறக்கோட்டை இரண்டாம் குறுக்குதெரு பகுதியில் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போது சில வர்த்தக நிலையங்களிலிருந்து இவை கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த சோதனை நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், இதற்குச் சுகாதார அமைச்சு ஆதரவு வழங்கியுள்ளது. மேலும், சருமத்தை வெண்மையாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் ஆபத்தான பல அழகு சாதனப் பொருட்கள் கைப்பற்றுள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.