• Sep 24 2024

மன்னார் கருங்கண்டல் பாடசாலையின் ஸ்மாட் வகுப்பறைகள் சஜித் பிரேமதாசவினால் திறந்துவைப்பு...!

Sharmi / Jul 15th 2024, 1:51 pm
image

Advertisement

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவின் 'பிரபஞ்சம்' நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட கருங்கண்டல் பாடசாலைக்கான இலத்திரனியல் மூல வகுப்பறை (SMART CLASS ROOM) கையளிக்கும் நிகழ்ச்சித்திட்டம் இன்றைய தினம் (15) காலை இடம்பெற்றது. 

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைகலநாதனின்  ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. 

 இதன் போது மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட கருங்கண்டல் பாடசாலையில் அமைக்கப்பட்ட குறித்த இலத்திரனியல் மூல வகுப்பறை (SMART CLASS ROOM) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டுள்ளது. 

 எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இணைந்து மடு வலயகல்வி பணிப்பாளர், கருங்கண்டல் பாடசாலை அதிபர், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் பிரதிநிதி வசந்த்  இணைந்து குறித்த SMART வகுப்பறைகளை வைபவ ரீதியாக திறந்து வைத்தார். 

 மேலும் குறித்த பாடசாலைகளின் நூலகங்களுக்கு தேவையான ஒரு தொகுதி ஆங்கில புத்தகங்கள் மேற்படி வழங்கி வைத்ததோடு,புதிய நூல்கள் கொள்வனவு செய்ய தலா ஒரு இலட்சம் ரூபாய் நிதியும்  சஜித் பிரேமதாசாவினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




மன்னார் கருங்கண்டல் பாடசாலையின் ஸ்மாட் வகுப்பறைகள் சஜித் பிரேமதாசவினால் திறந்துவைப்பு. எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவின் 'பிரபஞ்சம்' நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட கருங்கண்டல் பாடசாலைக்கான இலத்திரனியல் மூல வகுப்பறை (SMART CLASS ROOM) கையளிக்கும் நிகழ்ச்சித்திட்டம் இன்றைய தினம் (15) காலை இடம்பெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைகலநாதனின்  ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.  இதன் போது மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட கருங்கண்டல் பாடசாலையில் அமைக்கப்பட்ட குறித்த இலத்திரனியல் மூல வகுப்பறை (SMART CLASS ROOM) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டுள்ளது.  எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இணைந்து மடு வலயகல்வி பணிப்பாளர், கருங்கண்டல் பாடசாலை அதிபர், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் பிரதிநிதி வசந்த்  இணைந்து குறித்த SMART வகுப்பறைகளை வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.  மேலும் குறித்த பாடசாலைகளின் நூலகங்களுக்கு தேவையான ஒரு தொகுதி ஆங்கில புத்தகங்கள் மேற்படி வழங்கி வைத்ததோடு,புதிய நூல்கள் கொள்வனவு செய்ய தலா ஒரு இலட்சம் ரூபாய் நிதியும்  சஜித் பிரேமதாசாவினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement