• Sep 19 2024

பூநகரி கௌதாரிமுனையில் சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நிலையம்!SamugamMedia

Sharmi / Mar 24th 2023, 3:08 pm
image

Advertisement

பூநகரி - கௌதாரிமுனை பகுதியில் அமைக்கப்படவுள்ள சூரியசக்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் இன்று(24) கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடல் காலை 11 மணியளவில் ஆரம்பமானது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் ஆரம்பமான இக்கலந்துரையாடலில், Srilanka Sustainable Energy Authority Chairman Eng. Ranjith Sepala, Srilanka Sustainable Energy Authority Assistant Director Mr.Kankeyan Thureiraj, CEAA Consultant Team - Team Leader Mr.Anura Ranwala, Adani Green Energy SL Limited - Mr.Manoj Deshmukh மற்றும், வடக்கு மகாணாக காணி அணையாளர், பூநகரி பிரதேச செயலாளர் ரி.அகிலன் மற்றும் கடல்வாழ் நீரியல் திணைக்களம். வீதி அபிவிருத்தி அதிகார சபை, மின்சார சபை, வனவள பாதுகாப்பு திணைக்களம் உள்ளிட்ட திணைக்கள அதிகாரிகளும், பூநகரி பிரதேச செபை செயலாளர், இராணுவத்தினர், கடற்படை அதிகாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

குறித்த கலந்துரையாடலின்போது பல்வேறு விடயங்கள் பேசப்பட்டன.

கௌதாரி முனை கிராமத்தை சுற்றுலாவிற்கு பொருத்தமானதாக மாற்றப்படும் எனவும், அங்குள்ள முன்பள்ளி மற்றம் பாடசாலையின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்தல் மற்றும் ஆசிரியர்களின் திறண்களை அதிகரிக்கும் பயிற்சிகளை வழங்குதல் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

பிரதான வீதியை காபெற் வீதியாக அமைப்பதற்கும், உள்ளக வீதிகளையும் அபிவிருத்தி செய்து மக்களின் பயன்பாட்டுக்கு கையளிப்பது தொடர்பிலும் இத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், சுகாதாரம், வாழ்வாதாரம், தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுப்பதற்கும் இத்த்ிட்டத்தில் பிரதான கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் அவர்கள் இன்றைய தினம் விளக்கமளித்தனர்.

மேலும், குறித்த காற்றாலை மின் உற்பத்தி நிலையம் ஊடாக மிகப்பெரியளவிலான மின்னுற்பத்தி செய்யப்படவுள்ளது எனவு்ம, இதற்கான தொழில்நுட்பங்கள் நவீன முறையில் பயன்படுத்தப்படவுள்ளதால் சூழலுக்கு எவ்வித பாதிப்பினையும் ஏற்படுத்தப்போவதில்லை எனவும் அவர்கள் இதன்போது தெரிவித்தனர்.

மீன் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் மீனவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில், அவ்வாறு விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டால் நட்டயீடுகள் வழங்க நேரிடும் எனவும் இதன்போது குறிப்பிடப்பட்டது. அவ்வாறான பதிப்புக்கள் ஏதும் ஏற்படாது என அந்நிறுவனத்தினர் அழுத்தமாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




பூநகரி கௌதாரிமுனையில் சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நிலையம்SamugamMedia பூநகரி - கௌதாரிமுனை பகுதியில் அமைக்கப்படவுள்ள சூரியசக்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் இன்று(24) கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.குறித்த கலந்துரையாடல் காலை 11 மணியளவில் ஆரம்பமானது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் ஆரம்பமான இக்கலந்துரையாடலில், Srilanka Sustainable Energy Authority Chairman Eng. Ranjith Sepala, Srilanka Sustainable Energy Authority Assistant Director Mr.Kankeyan Thureiraj, CEAA Consultant Team - Team Leader Mr.Anura Ranwala, Adani Green Energy SL Limited - Mr.Manoj Deshmukh மற்றும், வடக்கு மகாணாக காணி அணையாளர், பூநகரி பிரதேச செயலாளர் ரி.அகிலன் மற்றும் கடல்வாழ் நீரியல் திணைக்களம். வீதி அபிவிருத்தி அதிகார சபை, மின்சார சபை, வனவள பாதுகாப்பு திணைக்களம் உள்ளிட்ட திணைக்கள அதிகாரிகளும், பூநகரி பிரதேச செபை செயலாளர், இராணுவத்தினர், கடற்படை அதிகாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.குறித்த கலந்துரையாடலின்போது பல்வேறு விடயங்கள் பேசப்பட்டன. கௌதாரி முனை கிராமத்தை சுற்றுலாவிற்கு பொருத்தமானதாக மாற்றப்படும் எனவும், அங்குள்ள முன்பள்ளி மற்றம் பாடசாலையின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்தல் மற்றும் ஆசிரியர்களின் திறண்களை அதிகரிக்கும் பயிற்சிகளை வழங்குதல் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.பிரதான வீதியை காபெற் வீதியாக அமைப்பதற்கும், உள்ளக வீதிகளையும் அபிவிருத்தி செய்து மக்களின் பயன்பாட்டுக்கு கையளிப்பது தொடர்பிலும் இத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.மேலும், சுகாதாரம், வாழ்வாதாரம், தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுப்பதற்கும் இத்த்ிட்டத்தில் பிரதான கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் அவர்கள் இன்றைய தினம் விளக்கமளித்தனர்.மேலும், குறித்த காற்றாலை மின் உற்பத்தி நிலையம் ஊடாக மிகப்பெரியளவிலான மின்னுற்பத்தி செய்யப்படவுள்ளது எனவு்ம, இதற்கான தொழில்நுட்பங்கள் நவீன முறையில் பயன்படுத்தப்படவுள்ளதால் சூழலுக்கு எவ்வித பாதிப்பினையும் ஏற்படுத்தப்போவதில்லை எனவும் அவர்கள் இதன்போது தெரிவித்தனர்.மீன் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் மீனவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில், அவ்வாறு விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டால் நட்டயீடுகள் வழங்க நேரிடும் எனவும் இதன்போது குறிப்பிடப்பட்டது. அவ்வாறான பதிப்புக்கள் ஏதும் ஏற்படாது என அந்நிறுவனத்தினர் அழுத்தமாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement