• Nov 26 2024

துப்பாக்கிகளை பயன்படுத்த படையினருக்கு அதிகாரம்! களத்தில் இறக்கப்படும் 60 ஆயிரம் பொலிஸார்!

Chithra / Sep 17th 2024, 10:13 am
image

 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்களிப்பு நிலையங்களில் அமைதியின்மை ஏற்பட்டால் பொலிஸாருக்கு துப்பாக்கிகளை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சூழ்நிலைகளை கட்டுப்படுத்துவதற்காக, பொலிஸாருக்கும் பாதுகாப்பு படையினருக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் நடைபெறும் நாளிலும் அதன் பின்னரும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விசேட பாதுகாப்பு திட்டம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளது  என  அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்லும் போது விசேட பாதுகாப்பு திட்டமொன்றும் நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

அத்துடன் தேர்தல் பாதுகாப்புக்காக 60,000 பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் தலைமையகம் தெரிவித்துள்ளது. 

மேலும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களில் 25 வேட்பாளர்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளனர்.

வேட்பாளர்களில் 09 பேர் பாதுகாப்பு கோரவில்லை எனவும், 04 பேர் பாதுகாப்பு வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

துப்பாக்கிகளை பயன்படுத்த படையினருக்கு அதிகாரம் களத்தில் இறக்கப்படும் 60 ஆயிரம் பொலிஸார்  எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்களிப்பு நிலையங்களில் அமைதியின்மை ஏற்பட்டால் பொலிஸாருக்கு துப்பாக்கிகளை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார்.இவ்வாறான சூழ்நிலைகளை கட்டுப்படுத்துவதற்காக, பொலிஸாருக்கும் பாதுகாப்பு படையினருக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.தேர்தல் நடைபெறும் நாளிலும் அதன் பின்னரும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விசேட பாதுகாப்பு திட்டம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளது  என  அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்லும் போது விசேட பாதுகாப்பு திட்டமொன்றும் நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.அத்துடன் தேர்தல் பாதுகாப்புக்காக 60,000 பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் தலைமையகம் தெரிவித்துள்ளது. மேலும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களில் 25 வேட்பாளர்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளனர்.வேட்பாளர்களில் 09 பேர் பாதுகாப்பு கோரவில்லை எனவும், 04 பேர் பாதுகாப்பு வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement