• Sep 19 2024

ஸ்ரீ தலதா மாளிகைக்கு களங்கத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி! இராஜாங்க அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை

Chithra / Jan 5th 2023, 11:37 am
image

Advertisement

கடந்த காலத்தில் ஸ்ரீ தலதா மாளிகை விடுதலைப்புலிகளினால் தாக்கப்பட்ட போது, சிங்கள மக்கள் மற்றும் பௌத்த சமயத்தவர்கள் கோபப்படவில்லை என வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார குறிப்பிட்டுள்ளார்.

நகத்தால் கிள்ளி எறிய வேண்டிய விடயத்தை கோடரி கொண்டு வெட்டவேண்டிய நிலை ஏற்படுமென வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

குறிப்பாக நாட்டில் மத நல்லிணக்கத்தை குழப்புவதற்கான முற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார குற்றம் சுமத்தியுள்ளார்.

பௌத்த மதத்தின் அடையாள சின்னமான ஸ்ரீ தலதா மாளிகைக்கு களங்கத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாக இராஜாங்க அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.


அரசியலமைப்பில் பௌத்த மதத்தை பாதுகாக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளதற்கு அமைவாக அரசாங்கத்திற்கு பாரிய பொறுப்பு உள்ளதாக சாந்த பண்டார சுட்டிக்காட்டியானார்.

விடுதலைப்புலிகளின் காலப்பகுதியில் தலதா மாளிகை தாக்கப்பட்ட போது சிங்கள மக்கள் மற்றும் பௌத்த சமயத்தவர்கள் கோபப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் தற்போது சமயம் சாராத மற்றும் கட்சி சாராத தரப்பினர் மத நல்லிணக்தை குழப்ப முயல்கின்றனர்.

ஸ்ரீ தலதா மாளிகைக்கு எதிராக சொற்பிரயோகங்களை பயன்படுத்துகின்றனர். பௌத்த சமய மக்களை கோபப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர். இது மிகவும் பிழையான விடயம் 

நகத்தால் கிள்ளி எறிய வேண்டியதை கோடரி கொண்டு வெட்டவேண்டிய நிலை ஏற்படுமென இராஜாங்க அமைச்சர் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்ரீ தலதா மாளிகைக்கு களங்கத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி இராஜாங்க அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை கடந்த காலத்தில் ஸ்ரீ தலதா மாளிகை விடுதலைப்புலிகளினால் தாக்கப்பட்ட போது, சிங்கள மக்கள் மற்றும் பௌத்த சமயத்தவர்கள் கோபப்படவில்லை என வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார குறிப்பிட்டுள்ளார்.நகத்தால் கிள்ளி எறிய வேண்டிய விடயத்தை கோடரி கொண்டு வெட்டவேண்டிய நிலை ஏற்படுமென வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்திருந்தார்.குறிப்பாக நாட்டில் மத நல்லிணக்கத்தை குழப்புவதற்கான முற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார குற்றம் சுமத்தியுள்ளார்.பௌத்த மதத்தின் அடையாள சின்னமான ஸ்ரீ தலதா மாளிகைக்கு களங்கத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாக இராஜாங்க அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.அரசியலமைப்பில் பௌத்த மதத்தை பாதுகாக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளதற்கு அமைவாக அரசாங்கத்திற்கு பாரிய பொறுப்பு உள்ளதாக சாந்த பண்டார சுட்டிக்காட்டியானார்.விடுதலைப்புலிகளின் காலப்பகுதியில் தலதா மாளிகை தாக்கப்பட்ட போது சிங்கள மக்கள் மற்றும் பௌத்த சமயத்தவர்கள் கோபப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.ஆனால் தற்போது சமயம் சாராத மற்றும் கட்சி சாராத தரப்பினர் மத நல்லிணக்தை குழப்ப முயல்கின்றனர்.ஸ்ரீ தலதா மாளிகைக்கு எதிராக சொற்பிரயோகங்களை பயன்படுத்துகின்றனர். பௌத்த சமய மக்களை கோபப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர். இது மிகவும் பிழையான விடயம் நகத்தால் கிள்ளி எறிய வேண்டியதை கோடரி கொண்டு வெட்டவேண்டிய நிலை ஏற்படுமென இராஜாங்க அமைச்சர் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement