• Oct 07 2024

பீடி இலைகளை கடத்துவதற்கு முற்பட்ட சிலர் தப்பியோட்டம்; ஒருவர் கைது

Chithra / Oct 6th 2024, 3:28 pm
image

Advertisement

 

புத்தளம் - நுரைச்சோலை, இழந்தையடி கரையோரப் பகுதியில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சுமார் 2500 கிலோ பீடி இலைகளுடன் கலேவெல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் லொறி மற்றும் வேனுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தின் பதில் நிலைய பொறுப்பதிகாரி ஜீவன் குமாரவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய  இழந்தையடி கரையோரப் பகுதியில் பீடி இலைகளை வாகனங்களுக்கு ஏற்றிக்கொண்டிருந்த வேளை சுற்றிவளைப்பை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

பீடி இலைகள் மூடைகளை கைவிட்டுவிட்டு சிலர் தப்பியோடியுள்ளதாகவும், இதன்போது ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் சுமார் ஒரு கோடிக்கு அதிக பெறுமதியென மதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பீடி இலைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லொறி ஆகியவற்றை கட்டுநாயக்க சுங்க திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக நுரைச்சோலைப் பொலிஸார் இதன்போது தெரிவித்தனர்.


பீடி இலைகளை கடத்துவதற்கு முற்பட்ட சிலர் தப்பியோட்டம்; ஒருவர் கைது  புத்தளம் - நுரைச்சோலை, இழந்தையடி கரையோரப் பகுதியில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சுமார் 2500 கிலோ பீடி இலைகளுடன் கலேவெல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் லொறி மற்றும் வேனுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தின் பதில் நிலைய பொறுப்பதிகாரி ஜீவன் குமாரவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய  இழந்தையடி கரையோரப் பகுதியில் பீடி இலைகளை வாகனங்களுக்கு ஏற்றிக்கொண்டிருந்த வேளை சுற்றிவளைப்பை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.பீடி இலைகள் மூடைகளை கைவிட்டுவிட்டு சிலர் தப்பியோடியுள்ளதாகவும், இதன்போது ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.இவ்வாறு கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் சுமார் ஒரு கோடிக்கு அதிக பெறுமதியென மதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு கைது செய்யப்பட்ட பீடி இலைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லொறி ஆகியவற்றை கட்டுநாயக்க சுங்க திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக நுரைச்சோலைப் பொலிஸார் இதன்போது தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement