ஒரு சில தமிழ் மற்றும் முஸ்லிம் தலைவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விரும்புவதில்லை. பிரச்சினைகளை வளர்த்தெடுக்கவே பார்க்கிறார்கள். இதனால் தான் நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை. என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்தார்
பாராளுமன்றத்தில் நடைபெற்ற அமர்வின் போது தோட்டங்கள் சார்ந்து காணப்படுகின்ற வீதிகளை அரசாங்கத்திற்குச் சுவீகரித்தல் குறித்த தனியார் உறுப்பினர் பிரேரணையை முன்வைத்து
உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி பெரும்பாலான பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் உள்ளார்கள்.
இவர்களின் குரல் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு அவசியம்.
தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை எதிர்காலத்திலும் அரசியலுக்கு பயன்படுத்துவதை
இனியேனும் நிறுத்த வேண்டும்.
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை அரசியல் பொம்மைகளாக்கி அதனூடாக ஆட்சியை கைப்பற்றும்செயற்பாடுகள் மாத்திரமே இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தமிழ் மக்களின் ஆதரவு இருந்தால் வெற்றிப் பெற முடியும் என்று குறிப்பிட்டுக் கொண்டு அவர்களுக்கு பிரத்தியேக கட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
அமைச்சுக்களும் ஸ்தாபிக்கப்பட்டன. ஆனால் உறுதியான தீர்வு கிடைக்கவில்லை.
ஒருசில தமிழ் மற்றும் முஸ்லிம் தலைவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விரும்புவதில்லை. பிரச்சினைகளை வளர்த்தெடுக்கவே பார்க்கிறார்கள்.
இதனால் தான் நிரந்தர தீர்வு எடுக்கவில்லை என்றார்.
தமிழ் மக்களின் பிரச்சினையை வளர்க்க நினைக்கும் சில தமிழ் மற்றும் முஸ்லிம் தலைவர்கள் எழுந்த குற்றச்சாட்டு ஒரு சில தமிழ் மற்றும் முஸ்லிம் தலைவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விரும்புவதில்லை. பிரச்சினைகளை வளர்த்தெடுக்கவே பார்க்கிறார்கள். இதனால் தான் நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை. என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்தார்பாராளுமன்றத்தில் நடைபெற்ற அமர்வின் போது தோட்டங்கள் சார்ந்து காணப்படுகின்ற வீதிகளை அரசாங்கத்திற்குச் சுவீகரித்தல் குறித்த தனியார் உறுப்பினர் பிரேரணையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி பெரும்பாலான பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் உள்ளார்கள்.இவர்களின் குரல் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு அவசியம். தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை எதிர்காலத்திலும் அரசியலுக்கு பயன்படுத்துவதை இனியேனும் நிறுத்த வேண்டும்.தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை அரசியல் பொம்மைகளாக்கி அதனூடாக ஆட்சியை கைப்பற்றும்செயற்பாடுகள் மாத்திரமே இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்களின் ஆதரவு இருந்தால் வெற்றிப் பெற முடியும் என்று குறிப்பிட்டுக் கொண்டு அவர்களுக்கு பிரத்தியேக கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அமைச்சுக்களும் ஸ்தாபிக்கப்பட்டன. ஆனால் உறுதியான தீர்வு கிடைக்கவில்லை.ஒருசில தமிழ் மற்றும் முஸ்லிம் தலைவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விரும்புவதில்லை. பிரச்சினைகளை வளர்த்தெடுக்கவே பார்க்கிறார்கள். இதனால் தான் நிரந்தர தீர்வு எடுக்கவில்லை என்றார்.