• May 07 2024

2023ஆம் ஆண்டுக்கான ரக்பி உலகக்கிண்ண 4ஆவது காலிறுதி போட்டியில் தென் ஆபிரிக்க அணி வெற்றி! samugammedia

Tamil nila / Oct 16th 2023, 1:04 pm
image

Advertisement

தற்போது இடம்பெற்று வரும் 2023ஆம் ஆண்டுக்கான ரக்பி உலகக்கிண்ண 4ஆவது காலிறுதி போட்டியில் தென் ஆபிரிக்க அணி வெற்றியீட்டியது.

2023 ரக்பி உலகக்கிண்ண 4ஆவது காலிறுதி போட்டி நேற்றய தினம் (15) பிரான்ஸில் உள்ள Stade de France வில் நடைபெற்றது.

குறித்த போட்டியில் நடப்பு சாம்பியனான தென் ஆபிரிக்க அணியும் பிரான்ஸ் அணியும் மோதின .

குறித்த போட்டியானது இரு அணிகளுக்கும் வாழ்வா? சாவா? எனும் போட்டியாக அமைந்த நிலையில் தோல்வியடையும் அணி இந்த உலகக்கிண்ணதில் இருந்து வெளியேறும் .

4ஆவது தடவை உலகக்கிண்ணத்தை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் தென் ஆப்பிரிக்கா அணியும் முதல் தடவை உலகக்கிண்ணத்தை வெல்லவேண்டும் என்ற முனைப்புடன் பிரான்ஸ் அணியும் முட்டிமோதிக்கொண்டன.

போட்டி முடிவின் போது 29-28 என்ற முறையில் பிரான்ஸ் அணிக்கு அதிர்ச்சி கொடுத்தது தென் ஆப்பிரிக்கா அணி.

பிரான்ஸ் அணியால் நடப்பு சாம்பியனை வீழ்த்த முடியாமல் சொந்த ரசிகர்களுக்கு மத்தியில் தோல்வி அடைந்தது .இந்நிலையில், அரையிறுதி போட்டியில் தென் ஆபிரிக்கா அணி இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது .

இந்த இரு அணியுமே 2019 ஆம் ஆண்டு ரக்பி உலகக்கிண்ண இறுதி போட்டியில் மோதிய நிலையில் குறித்த போட்டியில் 32-12 என தென் ஆபிரிக்கா வெற்றி பெற்று சாம்பியன் ஆக மகுடம் சூடியமை குறிப்பிடத்தக்கது.

2023ஆம் ஆண்டுக்கான ரக்பி உலகக்கிண்ண 4ஆவது காலிறுதி போட்டியில் தென் ஆபிரிக்க அணி வெற்றி samugammedia தற்போது இடம்பெற்று வரும் 2023ஆம் ஆண்டுக்கான ரக்பி உலகக்கிண்ண 4ஆவது காலிறுதி போட்டியில் தென் ஆபிரிக்க அணி வெற்றியீட்டியது.2023 ரக்பி உலகக்கிண்ண 4ஆவது காலிறுதி போட்டி நேற்றய தினம் (15) பிரான்ஸில் உள்ள Stade de France வில் நடைபெற்றது.குறித்த போட்டியில் நடப்பு சாம்பியனான தென் ஆபிரிக்க அணியும் பிரான்ஸ் அணியும் மோதின .குறித்த போட்டியானது இரு அணிகளுக்கும் வாழ்வா சாவா எனும் போட்டியாக அமைந்த நிலையில் தோல்வியடையும் அணி இந்த உலகக்கிண்ணதில் இருந்து வெளியேறும் .4ஆவது தடவை உலகக்கிண்ணத்தை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் தென் ஆப்பிரிக்கா அணியும் முதல் தடவை உலகக்கிண்ணத்தை வெல்லவேண்டும் என்ற முனைப்புடன் பிரான்ஸ் அணியும் முட்டிமோதிக்கொண்டன.போட்டி முடிவின் போது 29-28 என்ற முறையில் பிரான்ஸ் அணிக்கு அதிர்ச்சி கொடுத்தது தென் ஆப்பிரிக்கா அணி.பிரான்ஸ் அணியால் நடப்பு சாம்பியனை வீழ்த்த முடியாமல் சொந்த ரசிகர்களுக்கு மத்தியில் தோல்வி அடைந்தது .இந்நிலையில், அரையிறுதி போட்டியில் தென் ஆபிரிக்கா அணி இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது .இந்த இரு அணியுமே 2019 ஆம் ஆண்டு ரக்பி உலகக்கிண்ண இறுதி போட்டியில் மோதிய நிலையில் குறித்த போட்டியில் 32-12 என தென் ஆபிரிக்கா வெற்றி பெற்று சாம்பியன் ஆக மகுடம் சூடியமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement