• Oct 18 2025

தெற்காசிய மெய்வல்லுனர் போட்டி - இலங்கையிலிருந்து 59 பேர் பங்கேற்பு!

shanuja / Oct 17th 2025, 10:01 am
image

இந்தியாவில் நடைபெறவுள்ள தெற்காசிய மெய்வல்லுனர் சம்பியன்சிப் போட்டிக்கு 59 வீர, வீராங்கனைகளைக் கொண்ட இலங்கைக் குழுவினரை  தேசிய விளையாட்டு தேர்வுக் குழு அறிவித்துள்ளது.

 

இதில் 30 வீரர்கள் மற்றும் 29 வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். தெற்காசிய மெய்வல்லுனர் சம்பியன்சிப் போட்டி இந்தியாவின் ரான்சியில் எதிர்வரும் ஒக்டோபர் 24 தொடக்கம் 26 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.


இதற்காக அறிவிக்கப்பட்டிருக்கும் இலங்கை குழுவில் பதக்க எதிர்பார்ப்புகளாக ஓட்ட வீரர் காலிங்க குமாரகே, ஈட்டி எறிதல் வீரர்களான ருமேஷ் தரங்க மற்றும் சுமேத ரணசிங், ஈட்டி எறிதல் வீராங்கனை டில்ஹானி லேகம்கே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


அதேபோன்று வளர்ந்து வரும் நெடுந்தூர ஓட்ட வீரரான விக்னராஜ் வக்ஷான் 5000 மீற்றர் ஓட்டப்போட்டியில் பங்கேற்கவுள்ளர். பாங்கொக்கில் கடந்த ஜூன் மாதம்; நடைபெற்ற தாய்லாந்து ஓபன் மெய்வல்லுனர் போட்டியின் 5000 மீற்றர் ஓட்டப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றமை குறிப்பிடத்தக்கது.


இந்தியா, இலங்கை, பாகிஸ்தானுடன் தெற்காசியாவின் ஏழு நாடுகள் பங்கேற்கும் இந்த மெய்வல்லுனர் சம்பியன்சிப் போட்டி இரு முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையிலேயே அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளது.


தெற்காசிய மெய்வல்லுனர் போட்டி - இலங்கையிலிருந்து 59 பேர் பங்கேற்பு இந்தியாவில் நடைபெறவுள்ள தெற்காசிய மெய்வல்லுனர் சம்பியன்சிப் போட்டிக்கு 59 வீர, வீராங்கனைகளைக் கொண்ட இலங்கைக் குழுவினரை  தேசிய விளையாட்டு தேர்வுக் குழு அறிவித்துள்ளது. இதில் 30 வீரர்கள் மற்றும் 29 வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். தெற்காசிய மெய்வல்லுனர் சம்பியன்சிப் போட்டி இந்தியாவின் ரான்சியில் எதிர்வரும் ஒக்டோபர் 24 தொடக்கம் 26 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.இதற்காக அறிவிக்கப்பட்டிருக்கும் இலங்கை குழுவில் பதக்க எதிர்பார்ப்புகளாக ஓட்ட வீரர் காலிங்க குமாரகே, ஈட்டி எறிதல் வீரர்களான ருமேஷ் தரங்க மற்றும் சுமேத ரணசிங், ஈட்டி எறிதல் வீராங்கனை டில்ஹானி லேகம்கே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.அதேபோன்று வளர்ந்து வரும் நெடுந்தூர ஓட்ட வீரரான விக்னராஜ் வக்ஷான் 5000 மீற்றர் ஓட்டப்போட்டியில் பங்கேற்கவுள்ளர். பாங்கொக்கில் கடந்த ஜூன் மாதம்; நடைபெற்ற தாய்லாந்து ஓபன் மெய்வல்லுனர் போட்டியின் 5000 மீற்றர் ஓட்டப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றமை குறிப்பிடத்தக்கது.இந்தியா, இலங்கை, பாகிஸ்தானுடன் தெற்காசியாவின் ஏழு நாடுகள் பங்கேற்கும் இந்த மெய்வல்லுனர் சம்பியன்சிப் போட்டி இரு முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையிலேயே அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement