தென்னிந்திய நடிகர் ஜெய் ஆகாஷ் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
வரலாற்று சிறப்புமிக்க யாழ்.தாவடி ஸ்ரீ வட பத்திரகாளி அம்மன் தேவஸ்தான கொடியேற்ற நிகழ்வு நேற்றையதினம் பக்திபூர்வமாக இடம்பெற்றது.
இந்நிலையில் ஜெய் ஆகாஷ் நடிக்கும் திரைப்படமொன்றில் தாவடி ஸ்ரீ வட பத்திரகாளி அம்மனை புகழ்ந்துபாடும் பாடல் காட்சிக்கான சூட்டிங்கும் நேற்றையதினம் ஆலயத்தில் இடம்பெற்றது.
குறித்த பாடல் காட்சியுடன் எமது குலதெய்வத்தின் பெருமையினை உலகறியச் செய்யும் நோக்குடனேயே இங்கு வந்து பாடல் காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது என நடிகர் ஜெய் ஆகாஷ் இதன்போது தெரிவித்துள்ளார்.
அதேவேளை ஜெய் ஆகாஷ் ஆலயத்தில் பக்தர்களுடன் பக்தர்களாக நின்று சுவாமி தரிசனம் செய்ததுடன் பத்திரகாளி அம்மன் திருவீதியுலாவின் போது அவரும் அம்மனை பக்தர்களுடன் சேர்ந்து தோலில் சுமந்து சென்றுள்ளார்.
இந்நிலையில் அங்கு வந்த பக்தர்கள் பலரும் ஜெய் ஆகாசுடன் உரையாடி மகிழ்ந்தாக தெரிவிக்கப்படுகிறது.
யாழிற்கு விஜயம் செய்த தென்னிந்திய நடிகர் ஜெய் ஆகாஷ்: வெளியான காரணம். தென்னிந்திய நடிகர் ஜெய் ஆகாஷ் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.இது குறித்து மேலும் தெரியவருவதாவது,வரலாற்று சிறப்புமிக்க யாழ்.தாவடி ஸ்ரீ வட பத்திரகாளி அம்மன் தேவஸ்தான கொடியேற்ற நிகழ்வு நேற்றையதினம் பக்திபூர்வமாக இடம்பெற்றது.இந்நிலையில் ஜெய் ஆகாஷ் நடிக்கும் திரைப்படமொன்றில் தாவடி ஸ்ரீ வட பத்திரகாளி அம்மனை புகழ்ந்துபாடும் பாடல் காட்சிக்கான சூட்டிங்கும் நேற்றையதினம் ஆலயத்தில் இடம்பெற்றது.குறித்த பாடல் காட்சியுடன் எமது குலதெய்வத்தின் பெருமையினை உலகறியச் செய்யும் நோக்குடனேயே இங்கு வந்து பாடல் காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது என நடிகர் ஜெய் ஆகாஷ் இதன்போது தெரிவித்துள்ளார்.அதேவேளை ஜெய் ஆகாஷ் ஆலயத்தில் பக்தர்களுடன் பக்தர்களாக நின்று சுவாமி தரிசனம் செய்ததுடன் பத்திரகாளி அம்மன் திருவீதியுலாவின் போது அவரும் அம்மனை பக்தர்களுடன் சேர்ந்து தோலில் சுமந்து சென்றுள்ளார்.இந்நிலையில் அங்கு வந்த பக்தர்கள் பலரும் ஜெய் ஆகாசுடன் உரையாடி மகிழ்ந்தாக தெரிவிக்கப்படுகிறது.