• May 17 2024

வடகொரியாவுக்கு பதிலடி - டிரோன்களை சுட்டு வீழ்த்திய தென்கொரியா!

Tamil nila / Dec 26th 2022, 9:07 pm
image

Advertisement

கொரிய எல்லைப்பிரச்சினையில் வடகொரியா, தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் இடம்பெற்று வருகிறது.


தன் எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா மற்றும் அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.


இந்நிலையில், வடகொரியாவின் 5 ஆளில்லா டிரோன் விமானங்கள் இன்று தென்கொரிய வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளன.


இந்த டிரோன்களில் ஒன்று தென்கொரியாவின் தலைநகரான சியோலின் தெற்கு பகுதி எல்லைக்குள் மிகவும் உள்ளே வந்துள்ளது.


வடகொரிய டிரோன்கள் நுழைந்ததையடுத்து தென்கொரிய விமானப்படை தயார்படுத்தப்பட்டது.


போர் விமானங்கள், உளவு விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உடனடியாக விரைந்தன. வடகொரிய டிரோன்களை எச்சரிக்கும் வகையில் துப்பாக்கிச்சூடுகள் நடத்தப்பட்டன.


இந்த தாக்குதலில் டிரோன்கள் வீழ்த்தப்பட்ட தகவலை வடகொரியா வெளியாகவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வடகொரியாவுக்கு பதிலடி - டிரோன்களை சுட்டு வீழ்த்திய தென்கொரியா கொரிய எல்லைப்பிரச்சினையில் வடகொரியா, தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் இடம்பெற்று வருகிறது.தன் எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா மற்றும் அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.இந்நிலையில், வடகொரியாவின் 5 ஆளில்லா டிரோன் விமானங்கள் இன்று தென்கொரிய வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளன.இந்த டிரோன்களில் ஒன்று தென்கொரியாவின் தலைநகரான சியோலின் தெற்கு பகுதி எல்லைக்குள் மிகவும் உள்ளே வந்துள்ளது.வடகொரிய டிரோன்கள் நுழைந்ததையடுத்து தென்கொரிய விமானப்படை தயார்படுத்தப்பட்டது.போர் விமானங்கள், உளவு விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உடனடியாக விரைந்தன. வடகொரிய டிரோன்களை எச்சரிக்கும் வகையில் துப்பாக்கிச்சூடுகள் நடத்தப்பட்டன.இந்த தாக்குதலில் டிரோன்கள் வீழ்த்தப்பட்ட தகவலை வடகொரியா வெளியாகவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement