• May 11 2025

சுதந்திர தினத்தை முன்னிட்டு அரச நிறுவனங்களுக்கான விசேட அறிவிப்பு

Chithra / Feb 3rd 2025, 7:10 am
image


சுதந்திர தினத்தை முன்னிட்டு, அரச நிறுவனங்களின் தயார்படுத்தல்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை குறித்து அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

இதற்கமைய, இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தை ஒரு விசேட நிகழ்வாகக் கருதி, 01/2025 சுற்றறிக்கையின் சில விதிகளை செயல்படுத்த வேண்டாம் என்று அரச நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு பெப்ரவரி 1 முதல் 7ஆம் திகதி வரை ஒரு வாரத்திற்கு அனைத்து அரச கட்டடங்களிலும் தேசியக் கொடி ஏற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

பெப்ரவரி 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் கட்டடங்களை மின் விளக்குகளால் அலங்கரிக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

தற்போது மின்விளக்குகளால் கட்டடங்களை அலங்கரிக்கும் செயற்பாட்டை இரத்துச் செய்வதற்கு பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது.

மின்சார பாதுகாப்பு மற்றும் மின் அலங்காரச் செலவு தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட கருத்துக்கள், பரிந்துரைகள் மற்றும் பிரதிநிதித்துவங்களைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு அரச நிறுவனங்களுக்கான விசேட அறிவிப்பு சுதந்திர தினத்தை முன்னிட்டு, அரச நிறுவனங்களின் தயார்படுத்தல்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை குறித்து அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.இதற்கமைய, இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தை ஒரு விசேட நிகழ்வாகக் கருதி, 01/2025 சுற்றறிக்கையின் சில விதிகளை செயல்படுத்த வேண்டாம் என்று அரச நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி, ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு பெப்ரவரி 1 முதல் 7ஆம் திகதி வரை ஒரு வாரத்திற்கு அனைத்து அரச கட்டடங்களிலும் தேசியக் கொடி ஏற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.பெப்ரவரி 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் கட்டடங்களை மின் விளக்குகளால் அலங்கரிக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.தற்போது மின்விளக்குகளால் கட்டடங்களை அலங்கரிக்கும் செயற்பாட்டை இரத்துச் செய்வதற்கு பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது.மின்சார பாதுகாப்பு மற்றும் மின் அலங்காரச் செலவு தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட கருத்துக்கள், பரிந்துரைகள் மற்றும் பிரதிநிதித்துவங்களைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now