• May 17 2024

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி தொடர்பில் விசேட அறிவிப்பு! SamugamMedia

Chithra / Feb 20th 2023, 2:31 pm
image

Advertisement

2022 ஆம் கல்வியாண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகளை எதிர்வரும் ஜுன் மாதமளவில் வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இதனை தெரிவித்தார்.

2022 ஆம் கல்வியாண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கு கனிசமான ஆசிரியர்கள் விண்ணப்பிக்காமை பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளாந்த செலவினங்களுக்காக ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் 500 ரூபாய் போதுமானதாக அமையாமையினாலேயே ஆசிரியர்களின் விண்ணப்பம் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் நாளாந்த கொடுப்பனவினை 3 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க கல்வி அமைச்சர் அமைச்சரவையின் அனுமதியினை பெற்றுக்கொண்டார்.

எனினும் நாளாந்த கொடுப்பனவு தொடர்பிலான அதிகரிப்பினை கல்வி அமைச்சர் சுற்று நிரூபமாக அறிவிக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி தொடர்பில் விசேட அறிவிப்பு SamugamMedia 2022 ஆம் கல்வியாண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகளை எதிர்வரும் ஜுன் மாதமளவில் வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இதனை தெரிவித்தார்.2022 ஆம் கல்வியாண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கு கனிசமான ஆசிரியர்கள் விண்ணப்பிக்காமை பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நாளாந்த செலவினங்களுக்காக ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் 500 ரூபாய் போதுமானதாக அமையாமையினாலேயே ஆசிரியர்களின் விண்ணப்பம் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும் நாளாந்த கொடுப்பனவினை 3 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க கல்வி அமைச்சர் அமைச்சரவையின் அனுமதியினை பெற்றுக்கொண்டார்.எனினும் நாளாந்த கொடுப்பனவு தொடர்பிலான அதிகரிப்பினை கல்வி அமைச்சர் சுற்று நிரூபமாக அறிவிக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement