• May 17 2024

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டோருக்கான விசேட உதவித் திட்டம்!

Tamil nila / Jan 13th 2023, 11:14 pm
image

Advertisement

தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார சூழ்நிலையால் பாதிக்கப்பட்டு மூன்றுவேளை உணவின்றி அவதியுறும் மக்களுக்கான உலர் உணவு பொருட்களை திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர்,திருகோணமலை பட்டினமும் சூழலும், வெருகல், குச்சவெளி, மொறவெவ, கந்தளாய், கிண்ணியா மற்றும் சேருநுவர ஆகிய பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 100 பயனாளிகளுக்கு தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கு உலர் உணவு பொருட்கள் அகம் மனிதாபிமான வள நிலையத்தால் ( AHRC) வழங்கப்படவுள்ளது.



இதன் முதற்கட்ட பணிகள் நேற்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நேற்று திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 10 பயனாளிகளுக்கு திருகோணமலை மாவட்ட செயலகத்தின் நிறுவனங்களிற்கான இணைப்பாளர் திரு. A.M.M.S.B.அத்தநாயக்க தலைமையின் கீழ் உலருணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன. 



மேலும் இன்று வெள்ளிக்கிழமை மூதூர் மற்றும் கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 50 பயனாளிகளுக்கும் ரூபாய் 10000 (பத்தாயிரம்) பெறுமதியான உலர் உணவுப் பொருட்களை கிண்ணியா மற்றும் மூதூர் பிரதேச செயலகங்களின் உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டன. இதில் மற்றும்  (AHRC) அகம் மனிதாபிமான வள நிலையத்தின் பிரதி இணைப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் இணைந்து இப் பிரதேசங்களுக்கான உலருணவுப் பொருட்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.


பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டோருக்கான விசேட உதவித் திட்டம் தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார சூழ்நிலையால் பாதிக்கப்பட்டு மூன்றுவேளை உணவின்றி அவதியுறும் மக்களுக்கான உலர் உணவு பொருட்களை திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர்,திருகோணமலை பட்டினமும் சூழலும், வெருகல், குச்சவெளி, மொறவெவ, கந்தளாய், கிண்ணியா மற்றும் சேருநுவர ஆகிய பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 100 பயனாளிகளுக்கு தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கு உலர் உணவு பொருட்கள் அகம் மனிதாபிமான வள நிலையத்தால் ( AHRC) வழங்கப்படவுள்ளது.இதன் முதற்கட்ட பணிகள் நேற்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நேற்று திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 10 பயனாளிகளுக்கு திருகோணமலை மாவட்ட செயலகத்தின் நிறுவனங்களிற்கான இணைப்பாளர் திரு. A.M.M.S.B.அத்தநாயக்க தலைமையின் கீழ் உலருணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன. மேலும் இன்று வெள்ளிக்கிழமை மூதூர் மற்றும் கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 50 பயனாளிகளுக்கும் ரூபாய் 10000 (பத்தாயிரம்) பெறுமதியான உலர் உணவுப் பொருட்களை கிண்ணியா மற்றும் மூதூர் பிரதேச செயலகங்களின் உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டன. இதில் மற்றும்  (AHRC) அகம் மனிதாபிமான வள நிலையத்தின் பிரதி இணைப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் இணைந்து இப் பிரதேசங்களுக்கான உலருணவுப் பொருட்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement