எதிர்வரும் தேர்தல்களில் விழிப்புலன் அற்றவர்கள் வாக்களிப்பதற்காக விசேட ஏற்பாடு மேற்கொள்ளப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், விழிப்புலன் அற்ற வாக்காளர்களுக்காக தேசிய ரீதியில் நடைபெறும் அடுத்த தேர்தலில் ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திலும் தொட்டுணரக்கூடிய விசேட வாக்குச் சீட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்னாயக்க தெரிவித்தார்.
இது குறித்த முன்னோடித் திட்டமாக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 10 வாக்களிப்பு நிலையங்களில் இத்திட்டம் வெற்றியளித்துள்ளது.
அதேவேளை செவித்திறன் குறைபாடுள்ள சமூகத்தினரின் தேவைகள் மற்றும் இயலாமையுடைய நபர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்லக்கூடிய வசதிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும். அத்துடன், இயலாமையுடைய நபர்களுக்கு விசேட அடையாள அட்டையொன்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார்.
தேர்தல்களில் வாக்களிக்கும் விழிப்புலன் அற்றோருக்கு விசேட வாக்குச் சீட்டு.samugammedia எதிர்வரும் தேர்தல்களில் விழிப்புலன் அற்றவர்கள் வாக்களிப்பதற்காக விசேட ஏற்பாடு மேற்கொள்ளப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.அந்தவகையில், விழிப்புலன் அற்ற வாக்காளர்களுக்காக தேசிய ரீதியில் நடைபெறும் அடுத்த தேர்தலில் ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திலும் தொட்டுணரக்கூடிய விசேட வாக்குச் சீட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்னாயக்க தெரிவித்தார்.இது குறித்த முன்னோடித் திட்டமாக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 10 வாக்களிப்பு நிலையங்களில் இத்திட்டம் வெற்றியளித்துள்ளது.அதேவேளை செவித்திறன் குறைபாடுள்ள சமூகத்தினரின் தேவைகள் மற்றும் இயலாமையுடைய நபர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்லக்கூடிய வசதிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும். அத்துடன், இயலாமையுடைய நபர்களுக்கு விசேட அடையாள அட்டையொன்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார்.