• Nov 21 2024

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட சோதனை!

Chithra / Nov 20th 2024, 7:55 am
image

 

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நுகர்வோர் விவகார அதிகார சபையினால் நாடளாவிய ரீதியில் விசேட சோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. 

அறிக்கையொன்றை வெளியிட்டு நுகர்வோர் விவகார அதிகார சபை இதனைத் தெரிவித்துள்ளது. 

அதற்கமைய, எதிர்வரும் 25ஆம் திகதி முதல் அடுத்த வருடம் ஜனவரி 15ஆம் திகதி வரையில் குறித்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்போது, பிரதான மொத்த விற்பனை நிலையங்கள் மற்றும் களஞ்சியசாலை என்பவற்றை சோதனையிட்டு, காலாவதியான மற்றும் விபரங்கள் திரிபுபடுத்தப்பட்ட பொருட்கள் சந்தைக்கு விடுவிக்கப்படுவதைத் தடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. 

அதேநேரம், குறித்த காலப்பகுதியினுள் சிறப்பங்காடிகள் உள்ளிட்ட சில்லறை விற்பனை நிலையங்கள், மலிவு விற்பனை நிலையங்கள் மற்றும் நடமாடும் வர்த்தகங்கள் குறித்தும் கூடுதல் அவதானம் செலுத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட சோதனை  எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நுகர்வோர் விவகார அதிகார சபையினால் நாடளாவிய ரீதியில் விசேட சோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அறிக்கையொன்றை வெளியிட்டு நுகர்வோர் விவகார அதிகார சபை இதனைத் தெரிவித்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 25ஆம் திகதி முதல் அடுத்த வருடம் ஜனவரி 15ஆம் திகதி வரையில் குறித்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, பிரதான மொத்த விற்பனை நிலையங்கள் மற்றும் களஞ்சியசாலை என்பவற்றை சோதனையிட்டு, காலாவதியான மற்றும் விபரங்கள் திரிபுபடுத்தப்பட்ட பொருட்கள் சந்தைக்கு விடுவிக்கப்படுவதைத் தடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், குறித்த காலப்பகுதியினுள் சிறப்பங்காடிகள் உள்ளிட்ட சில்லறை விற்பனை நிலையங்கள், மலிவு விற்பனை நிலையங்கள் மற்றும் நடமாடும் வர்த்தகங்கள் குறித்தும் கூடுதல் அவதானம் செலுத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement