• May 17 2024

யாழில் வெள்ளி, ஞாயிறு தினங்களில் பிரத்தியேக வகுப்புக்களுக்கும் தடை! அரச அதிபர் அதிரடி அறிவிப்பு samugammedia

Chithra / Jul 19th 2023, 4:57 pm
image

Advertisement

யாழ்ப்பாண மாவட்டத்தில் வெள்ளி ஞாயிறு ஆகிய தினங்களில் தனியார் வகுப்புகள் நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பிரத்தியேக வகுப்புகள் இடம்பெறுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்களும் இந்த விதிமுறைகளுக்கமைய செயற்பட வேண்டும். தவறும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.

தனியார் கல்வி நிலைய உரிமையாளர்களுக்கும் யாழ். மாவட்ட அரச அதிபருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது மேற்படி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

தனியார் கல்வி நிலைய பிரதிநிதிகளுக்கும் யாழ் மாவட்ட அரச அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் அரச அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.

தனியார் கல்வி நிலைய பிரதிநிதிகளால் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வகுப்புக்களை நிறுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதியத்திற்குப் பின்  வகுப்புக்களை நடாத்த அனுமதி வழங்குமாறும், அதேவேளை க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான தயார்ப்படுத்தல் தரம் 9 ஆம் வகுப்பிலிருந்து ஆரம்பிப்பதால் அம் மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தனியார் கல்வி நிலையங்கள் வகுப்புக்களை நிறுத்தும் அதேவேளை பிரத்தியேக வகுப்புக்கள் இடம்பெற்று வருவதை கட்டுப்படுத்துமாறும் அந்நிறுவனங்களின் பதிவுகளை மேற்கொள்ள அறிவுறுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டன.

மேலும் தொடர்ச்சியாக ஏழுநாட்களும் பிள்ளைகள் கல்வி நடவடிக்கைளில் ஈடுபடுவதால் ஏற்படும் உளபாதிப்பை குறைக்கும் நோக்கிலேயே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

பிள்ளைகளின் உளசமூக செயற்பாட்டினை மேம்படுத்தவும் அறநெறி கல்வியினை ஊக்குவிக்கும் முகமாகவும் சிறுவர்களை பாதுகாக்கும் நோக்கிலும் அவர்களை சமூக விருத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி ஊக்குவிக்கும் முகமாகவும் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கேற்ப வகுப்புக்களை மீள ஒழுங்குபடுத்தி செயற்படுமாறும் அரச அதிபரால் கேட்டுக்கொள்ளப்பட்டதுடன், மேலும் பாடசாலை நேரங்களுக்கு புறம்பாக மேற்படி தீர்மானங்களுக்கு கட்டுப்படாத குழு வகுப்புக்கள் தொடர்பாக எதிர்வரும் காலத்தில் உரிய நடவடிக்கையெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் மாவட்ட அரச அதிபர், மேலதிக அரச அதிபர், மேலதிக அரச அதிபர் (காணி), யாழ் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர் , தனியார் கல்வி நிலைய இயக்குநர்கள், யாழ் மாவட்ட சிறுவர் பாதுகாப்புசார் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.


யாழில் வெள்ளி, ஞாயிறு தினங்களில் பிரத்தியேக வகுப்புக்களுக்கும் தடை அரச அதிபர் அதிரடி அறிவிப்பு samugammedia யாழ்ப்பாண மாவட்டத்தில் வெள்ளி ஞாயிறு ஆகிய தினங்களில் தனியார் வகுப்புகள் நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பிரத்தியேக வகுப்புகள் இடம்பெறுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்களும் இந்த விதிமுறைகளுக்கமைய செயற்பட வேண்டும். தவறும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.தனியார் கல்வி நிலைய உரிமையாளர்களுக்கும் யாழ். மாவட்ட அரச அதிபருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது மேற்படி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.தனியார் கல்வி நிலைய பிரதிநிதிகளுக்கும் யாழ் மாவட்ட அரச அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் அரச அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.தனியார் கல்வி நிலைய பிரதிநிதிகளால் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வகுப்புக்களை நிறுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதியத்திற்குப் பின்  வகுப்புக்களை நடாத்த அனுமதி வழங்குமாறும், அதேவேளை க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான தயார்ப்படுத்தல் தரம் 9 ஆம் வகுப்பிலிருந்து ஆரம்பிப்பதால் அம் மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.தனியார் கல்வி நிலையங்கள் வகுப்புக்களை நிறுத்தும் அதேவேளை பிரத்தியேக வகுப்புக்கள் இடம்பெற்று வருவதை கட்டுப்படுத்துமாறும் அந்நிறுவனங்களின் பதிவுகளை மேற்கொள்ள அறிவுறுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டன.மேலும் தொடர்ச்சியாக ஏழுநாட்களும் பிள்ளைகள் கல்வி நடவடிக்கைளில் ஈடுபடுவதால் ஏற்படும் உளபாதிப்பை குறைக்கும் நோக்கிலேயே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.பிள்ளைகளின் உளசமூக செயற்பாட்டினை மேம்படுத்தவும் அறநெறி கல்வியினை ஊக்குவிக்கும் முகமாகவும் சிறுவர்களை பாதுகாக்கும் நோக்கிலும் அவர்களை சமூக விருத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி ஊக்குவிக்கும் முகமாகவும் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கேற்ப வகுப்புக்களை மீள ஒழுங்குபடுத்தி செயற்படுமாறும் அரச அதிபரால் கேட்டுக்கொள்ளப்பட்டதுடன், மேலும் பாடசாலை நேரங்களுக்கு புறம்பாக மேற்படி தீர்மானங்களுக்கு கட்டுப்படாத குழு வகுப்புக்கள் தொடர்பாக எதிர்வரும் காலத்தில் உரிய நடவடிக்கையெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.இக்கலந்துரையாடலில் மாவட்ட அரச அதிபர், மேலதிக அரச அதிபர், மேலதிக அரச அதிபர் (காணி), யாழ் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர் , தனியார் கல்வி நிலைய இயக்குநர்கள், யாழ் மாவட்ட சிறுவர் பாதுகாப்புசார் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement