• May 19 2024

நிந்தவூர் அட்டைப்பள்ளம் பிரதேச கடலரிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்!SamugamMedia

Sharmi / Mar 14th 2023, 2:43 pm
image

Advertisement

நிந்தவூர் அட்டைப்பள்ளம் பிரதேசத்தில் ஏற்பட்டு வரும் கடலரிப்பு சம்பந்தமாக அப்பிரதேசத்திலுள்ள தோட்ட உரிமையாளர்கள்,ஹோட்டல் உரிமாயாளர்கள், மீனவர்கள் மற்றும் பொது மக்கள் இணைந்து நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் அவர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் கடலரிப்பினால் பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் உட்பட பொதுமக்கள் அனைவரும் இப்பிரச்சனைக்கான நிரந்தர தீர்வினைப் பெற்றுத் தருமாறு தவிசாளர் தாஹிரிடம் வேண்டுகோளை முன்வைத்திருந்தனர்.

இதன்போது அட்டைப்பள்ளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தினால் மகஜர் ஒன்றும் தவிசாளரிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளரை உடனடியாக அணுகி இவ்வனர்த்தம் குறித்து தெரியப்படுத்துவதுடன் கரையோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளை நேரில் அழைத்து இக்கடலரிப்பிற்கான நிரந்தர தீர்வு நோக்கிய நகர்வுகளை தான் அவசரமாக முன்னெடுப்பதாக தவிசாளர் தாஹிர் தெரிவித்திருந்தார்.




நிந்தவூர் அட்டைப்பள்ளம் பிரதேச கடலரிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்SamugamMedia நிந்தவூர் அட்டைப்பள்ளம் பிரதேசத்தில் ஏற்பட்டு வரும் கடலரிப்பு சம்பந்தமாக அப்பிரதேசத்திலுள்ள தோட்ட உரிமையாளர்கள்,ஹோட்டல் உரிமாயாளர்கள், மீனவர்கள் மற்றும் பொது மக்கள் இணைந்து நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் அவர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) இடம்பெற்றது.இக் கலந்துரையாடலில் கடலரிப்பினால் பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் உட்பட பொதுமக்கள் அனைவரும் இப்பிரச்சனைக்கான நிரந்தர தீர்வினைப் பெற்றுத் தருமாறு தவிசாளர் தாஹிரிடம் வேண்டுகோளை முன்வைத்திருந்தனர்.இதன்போது அட்டைப்பள்ளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தினால் மகஜர் ஒன்றும் தவிசாளரிடம் கையளிக்கப்பட்டிருந்தது.இது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளரை உடனடியாக அணுகி இவ்வனர்த்தம் குறித்து தெரியப்படுத்துவதுடன் கரையோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளை நேரில் அழைத்து இக்கடலரிப்பிற்கான நிரந்தர தீர்வு நோக்கிய நகர்வுகளை தான் அவசரமாக முன்னெடுப்பதாக தவிசாளர் தாஹிர் தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement