• Sep 21 2024

திருகோணமலையில் அரச நெல் கொள்வனவு தொடர்பான விசேட கலந்துரையாடல்! SamugamMedia

Tamil nila / Feb 21st 2023, 9:42 pm
image

Advertisement

அரச நெல் கொள்வனவு தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (21) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் பி. எச். என் .ஜயவிக்கிரம தலைமையில் நடைபெற்றது .


அரச நெல் கொள்வனவு தொடர்பாக தற்பொழுது இரண்டு சுற்று நிருபங்கள் வெளியிடப்பட்டுள்ளன .



அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில் மாவட்டத்தில் நெல் கொள்வனவு தொடர்பான பொறிமுறையை எவ்வாறு மேற்கொள்வது தொடர்பான விளக்கம் இதன் போது அரசாங்க அதிபரால் பிரதேச செயலாளர் உள்ளிட்ட துறை சார் திணைக்கள தலைவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது .


 2022/23 பெரும் போகத்தில் கிடைக்கப்பெற்ற நெல்லினை விவசாயிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளுகின்ற வேலை திட்டத்தின் கீழ் பிரதேச செயலகங்களின் ஒருங்கிணைப்பு மூலம் தெரிவு செய்யப்பட்ட சிறிய ,நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் மூலமாக நெல் கொள்வனவு இடம்பெற இருக்கின்றது. 


குறித்த அரிசி ஆலை உரிமையாளர்கள் நெல்லினை அரிசியாக மாற்றி பிரதேச செயலகங்களுக்கு வழங்க வேண்டும் . ஜனாதிபதியினுடைய எண்ணக்கருவுக்கு அமைய தெரிவு செய்யப்பட்ட வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு 10 கிலோ கிராம் அரிசி வழங்கல் என்ற அடிப்படையில் இத்திட்டம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. 


அத்துடன் சமூக நலம்புரி சபை மூலமாக மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்ற வேலை திட்டங்கள் தொடர்பான விடயங்கள் , உணவு பாதுகாப்பு தொடர்பான முன்னேற்ற மீளாய்வு, காணி குறித்த விடயங்கள்  இதன் போது கலந்துரையாடப்பட்டன .


இக்கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக  அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி )எஸ். சுதாகரன் ,மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர்  கே. விஜயதாசன், திணைக்களத் தலைவர்கள் மற்றும் துறை சார் உத்தியோத்தர்கள் கலந்து கொண்டனர்.

திருகோணமலையில் அரச நெல் கொள்வனவு தொடர்பான விசேட கலந்துரையாடல் SamugamMedia அரச நெல் கொள்வனவு தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (21) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் பி. எச். என் .ஜயவிக்கிரம தலைமையில் நடைபெற்றது .அரச நெல் கொள்வனவு தொடர்பாக தற்பொழுது இரண்டு சுற்று நிருபங்கள் வெளியிடப்பட்டுள்ளன .அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில் மாவட்டத்தில் நெல் கொள்வனவு தொடர்பான பொறிமுறையை எவ்வாறு மேற்கொள்வது தொடர்பான விளக்கம் இதன் போது அரசாங்க அதிபரால் பிரதேச செயலாளர் உள்ளிட்ட துறை சார் திணைக்கள தலைவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது . 2022/23 பெரும் போகத்தில் கிடைக்கப்பெற்ற நெல்லினை விவசாயிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளுகின்ற வேலை திட்டத்தின் கீழ் பிரதேச செயலகங்களின் ஒருங்கிணைப்பு மூலம் தெரிவு செய்யப்பட்ட சிறிய ,நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் மூலமாக நெல் கொள்வனவு இடம்பெற இருக்கின்றது. குறித்த அரிசி ஆலை உரிமையாளர்கள் நெல்லினை அரிசியாக மாற்றி பிரதேச செயலகங்களுக்கு வழங்க வேண்டும் . ஜனாதிபதியினுடைய எண்ணக்கருவுக்கு அமைய தெரிவு செய்யப்பட்ட வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு 10 கிலோ கிராம் அரிசி வழங்கல் என்ற அடிப்படையில் இத்திட்டம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அத்துடன் சமூக நலம்புரி சபை மூலமாக மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்ற வேலை திட்டங்கள் தொடர்பான விடயங்கள் , உணவு பாதுகாப்பு தொடர்பான முன்னேற்ற மீளாய்வு, காணி குறித்த விடயங்கள்  இதன் போது கலந்துரையாடப்பட்டன .இக்கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக  அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி )எஸ். சுதாகரன் ,மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர்  கே. விஜயதாசன், திணைக்களத் தலைவர்கள் மற்றும் துறை சார் உத்தியோத்தர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement