• May 20 2024

அரச காணிகள் மற்றும் பயன்பாடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல்! samugammedia

Tamil nila / Apr 26th 2023, 7:56 pm
image

Advertisement

அரச காணிகள் மற்றும் பயன்பாடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தலைமையில் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலக மாநாட்டு மண்டபத்தில் 3 மணிக்கு ஆரம்பமானது.


இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, வடமாகாண காணி மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் பற்றிக் நிரஞ்சன் மற்றும் கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர்கள், மாகாண காணி ஆணையாளர் உள்ளிட்ட  அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


இதன் போது, அரச காணிகள் மற்றும் அதன் பயன்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

தொடர்ந்து வடமாகாண காணி மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் பற்றிக் நிரஞ்சன் கருத்து தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடல் இன்று வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் பணிபுரியும் பிரதேச செயலாளர்களுடன் ஆளுநர் தலைமையில் இடம்பெற்றதாகவும், இதன் தொடர்ச்சி நாளை மன்னாரில் இடம்பெறும் எனவும் தெரிவித்தார்.


பிரதேச செயலாளர்களால் கையாள முடியாத காணி பிரச்சினைகள், காணி ஆவணங்கள் வழங்கல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராயப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அரச காணிகள் மற்றும் பயன்பாடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் samugammedia அரச காணிகள் மற்றும் பயன்பாடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.குறித்த கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தலைமையில் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலக மாநாட்டு மண்டபத்தில் 3 மணிக்கு ஆரம்பமானது.இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, வடமாகாண காணி மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் பற்றிக் நிரஞ்சன் மற்றும் கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர்கள், மாகாண காணி ஆணையாளர் உள்ளிட்ட  அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.இதன் போது, அரச காணிகள் மற்றும் அதன் பயன்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.தொடர்ந்து வடமாகாண காணி மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் பற்றிக் நிரஞ்சன் கருத்து தெரிவித்தார்.குறித்த கலந்துரையாடல் இன்று வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் பணிபுரியும் பிரதேச செயலாளர்களுடன் ஆளுநர் தலைமையில் இடம்பெற்றதாகவும், இதன் தொடர்ச்சி நாளை மன்னாரில் இடம்பெறும் எனவும் தெரிவித்தார்.பிரதேச செயலாளர்களால் கையாள முடியாத காணி பிரச்சினைகள், காணி ஆவணங்கள் வழங்கல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராயப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement