• Nov 24 2024

இலங்கைப் பெண்களுக்கு விசேட கடன் திட்டம்! வெளியான மகிழ்ச்சி செய்தி

Chithra / Jul 3rd 2024, 11:17 am
image

 

பெண்கள் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு உள்ள தடைகளை நீக்கும் வகையில் விசேட கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு 2 பில்லியன் ரூபா ஒதுக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரசாங்கத்தின் கூற்றுப்படி, இலங்கையின் பொருளாதார விவகாரங்களில் பெண்களின் பங்களிப்பு ஏனைய பிராந்திய மற்றும் ஆசிய நாடுகளை விட குறைந்த மட்டத்தில் காணப்படுகின்றது.

2022 ஆம் ஆண்டு இலங்கையின் பணியாளர்களின் கணக்கெடுப்பின்படி, பொருளாதார ரீதியாக சுறுசுறுப்பான சனத்தொகையில் முப்பத்தைந்து வீதமானவர்கள் பெண்கள் ஆவர். 

இது பொருளாதார பங்கேற்பின் பாலின பங்களிப்பு விகிதங்களில் குறிப்பிடத்தக்க ஏற்றத்தாழ்வைக் காட்டுகிறது.

பெண்களின் வரையறுக்கப்பட்ட நிதி, கல்வியறிவு மற்றும் கடன் பெறுவதற்கு தேவையான சொத்து அல்லது பாதுகாப்பு இல்லாமை போன்ற காரணங்களால் நிதி ஆதாரங்களை அணுகுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.

இலங்கையில் பெண் தொழில் முயற்சியாளர்கள் எதிர்கொள்ளும் பிரதான தடைகளாக இவை இனங்காணப்பட்டுள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே பெண்கள் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு உள்ள தடைகளை நீக்கும் வகையில் விசேட கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அதிபரால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 


இலங்கைப் பெண்களுக்கு விசேட கடன் திட்டம் வெளியான மகிழ்ச்சி செய்தி  பெண்கள் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு உள்ள தடைகளை நீக்கும் வகையில் விசேட கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு 2 பில்லியன் ரூபா ஒதுக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.அரசாங்கத்தின் கூற்றுப்படி, இலங்கையின் பொருளாதார விவகாரங்களில் பெண்களின் பங்களிப்பு ஏனைய பிராந்திய மற்றும் ஆசிய நாடுகளை விட குறைந்த மட்டத்தில் காணப்படுகின்றது.2022 ஆம் ஆண்டு இலங்கையின் பணியாளர்களின் கணக்கெடுப்பின்படி, பொருளாதார ரீதியாக சுறுசுறுப்பான சனத்தொகையில் முப்பத்தைந்து வீதமானவர்கள் பெண்கள் ஆவர். இது பொருளாதார பங்கேற்பின் பாலின பங்களிப்பு விகிதங்களில் குறிப்பிடத்தக்க ஏற்றத்தாழ்வைக் காட்டுகிறது.பெண்களின் வரையறுக்கப்பட்ட நிதி, கல்வியறிவு மற்றும் கடன் பெறுவதற்கு தேவையான சொத்து அல்லது பாதுகாப்பு இல்லாமை போன்ற காரணங்களால் நிதி ஆதாரங்களை அணுகுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.இலங்கையில் பெண் தொழில் முயற்சியாளர்கள் எதிர்கொள்ளும் பிரதான தடைகளாக இவை இனங்காணப்பட்டுள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.எனவே பெண்கள் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு உள்ள தடைகளை நீக்கும் வகையில் விசேட கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அதிபரால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement