• Apr 04 2025

பூஸா சிறைச்சாலையில் விசேட சோதனை; பல்வேறு பொருட்கள் கைப்பற்றல்

Chithra / Apr 3rd 2025, 11:35 am
image

 

பூஸா சிறைச்சாலையில் நேற்று புதன்கிழமை (02) இரவு மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் ஹெரோயின் போதைப்பொருள் உட்பட பல்வேறு பொருட்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் சிறைச்சாலையில் உள்ள சிறைக்கூண்டுகள் மற்றும் ஏனைய பகுதிகளிலிருந்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது, 8 கையடக்கத் தொலைபேசிகள், 6 சார்ஜர்கள், 5 சிம் அட்டைகள், 5 ஹெட்செட்கள், 3 ரவுட்டர்கள், 

27 லைட்டர்கள், 9 டேட்டா கேபிள்கள், மற்றும் 02 கிராம் 850 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் என்பன பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சிறைச்சாலை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். 

பூஸா சிறைச்சாலையில் விசேட சோதனை; பல்வேறு பொருட்கள் கைப்பற்றல்  பூஸா சிறைச்சாலையில் நேற்று புதன்கிழமை (02) இரவு மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் ஹெரோயின் போதைப்பொருள் உட்பட பல்வேறு பொருட்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் சிறைச்சாலையில் உள்ள சிறைக்கூண்டுகள் மற்றும் ஏனைய பகுதிகளிலிருந்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.இதன்போது, 8 கையடக்கத் தொலைபேசிகள், 6 சார்ஜர்கள், 5 சிம் அட்டைகள், 5 ஹெட்செட்கள், 3 ரவுட்டர்கள், 27 லைட்டர்கள், 9 டேட்டா கேபிள்கள், மற்றும் 02 கிராம் 850 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் என்பன பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சிறைச்சாலை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement