ஜனாதிபதித் தேர்தலின் பாதுகாப்புக்குத் தேவையான பொலிஸ் உத்தியோகத்தர்களை வழங்குவதற்கு ஜனாதிபதியின் அனுமதி கிடைத்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் தேர்தலுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோர் இன்று (31) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலுக்காக பொலிஸ்மா அதிபர் அல்லது பதில் பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளரிடம் நேற்று (30) எழுத்து மூலம் தேர்தல்கள் ஆணைக்குழு கோரியிருந்தது.
இந்த கோரிக்கைக்குப் பதிலளிக்கும் போதே ஜனாதிபதியின் செயலாளர் இதனைத் தெரிவித்ததாகத் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கு விசேட பாதுகாப்பு; பொலிஸ் அதிகாரிகளை வழங்க அனுமதி ஜனாதிபதித் தேர்தலின் பாதுகாப்புக்குத் தேவையான பொலிஸ் உத்தியோகத்தர்களை வழங்குவதற்கு ஜனாதிபதியின் அனுமதி கிடைத்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.ஜனாதிபதித் தேர்தல் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் தேர்தலுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோர் இன்று (31) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.ஜனாதிபதித் தேர்தலுக்காக பொலிஸ்மா அதிபர் அல்லது பதில் பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளரிடம் நேற்று (30) எழுத்து மூலம் தேர்தல்கள் ஆணைக்குழு கோரியிருந்தது. இந்த கோரிக்கைக்குப் பதிலளிக்கும் போதே ஜனாதிபதியின் செயலாளர் இதனைத் தெரிவித்ததாகத் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.