• Sep 19 2024

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் விசேட செயலமர்வு!

Sharmi / Dec 12th 2022, 3:05 pm
image

Advertisement

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இரண்டு வலயங்களை சேர்ந்த 100 இற்கும் மேற்பட்ட அதிபர்களுக்கு மனித உரிமைகள், சிறுவர் உரிமைகள், உடல் ரீதியான தண்டனையிலிருந்து சிறுவர்களை பாதுகாத்தல் எனும் தலைப்பில் செயலமர்வு ஒன்று இன்று 12.12.2022 கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்தில் இடமபெற்றது.

இதில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் மேற்படி தலைப்புக்கள் தொடர்பில் விரிவுரையாற்றினார்.

அத்துடன் கிளிநொச்சி வடக்கு, தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர்கள், கிளிநொச்சி மாவட்ட தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் மாவட்ட இணைப்பாளர், மாவட்ட சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் மற்றும் ஆணைக்குழுவின் அலுவலர்களும் பங்குபற்றினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் விசேட செயலமர்வு சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இரண்டு வலயங்களை சேர்ந்த 100 இற்கும் மேற்பட்ட அதிபர்களுக்கு மனித உரிமைகள், சிறுவர் உரிமைகள், உடல் ரீதியான தண்டனையிலிருந்து சிறுவர்களை பாதுகாத்தல் எனும் தலைப்பில் செயலமர்வு ஒன்று இன்று 12.12.2022 கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்தில் இடமபெற்றது.இதில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் மேற்படி தலைப்புக்கள் தொடர்பில் விரிவுரையாற்றினார்.அத்துடன் கிளிநொச்சி வடக்கு, தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர்கள், கிளிநொச்சி மாவட்ட தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் மாவட்ட இணைப்பாளர், மாவட்ட சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் மற்றும் ஆணைக்குழுவின் அலுவலர்களும் பங்குபற்றினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement