தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் மீண்டும் கொழும்பு திரும்புவதற்காக ஏப்ரல் 19 மற்றும் 20 ஆகிய இரு நாட்களுக்கு விசேட ரயில் சேவை ஒன்றை செயல்படுத்தியுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த விசேட ரயில் அட்டவணையின் கீழ் இயக்கப்படும் சேவைகள் மூலம், சொந்த ஊர்களுக்கு சென்ற மக்களுக்கு மீண்டும் கொழும்பு கோட்டைக்கு திரும்புவதற்கு வசதி ஏற்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, காலியிலிருந்து கொழும்பு கோட்டைக்கு வருவதற்காகவும், பெலியத்தையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு வருவதற்காகவும் தலா இரண்டு விசேட ரயில் சேவைகளை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பதுளையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு வருவதற்காக இரண்டு ரயில் சேவைகளை இயக்கவும் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இதன் மூலம் பொது மக்களுக்கு மீண்டும் கொழும்பு கோட்டைக்கு பயணிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பண்டிகைக் காலத்தின் மூன்று நாட்களிலும் இலங்கை போக்குவரத்து சபையின் வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளது.
அதன்படி, கடந்த 10, 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் மட்டும் 600 மில்லியன் வருமானத்தை ஈட்டியுள்ளனர்.
இவ்வாறு இலங்கை போக்குவரத்து சபையின் பிரதிப் பொது முகாமையாளர் டி.எச்.ஆர்.டி. சந்திரசிறி தெரிவித்தார்.
சொந்த ஊர் சென்றவர்களுக்கு விசேட ரயில் சேவை; மூன்று நாட்களில் வருமானத்தை குவித்த இலங்கை போக்குவரத்து சபை தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் மீண்டும் கொழும்பு திரும்புவதற்காக ஏப்ரல் 19 மற்றும் 20 ஆகிய இரு நாட்களுக்கு விசேட ரயில் சேவை ஒன்றை செயல்படுத்தியுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.இந்த விசேட ரயில் அட்டவணையின் கீழ் இயக்கப்படும் சேவைகள் மூலம், சொந்த ஊர்களுக்கு சென்ற மக்களுக்கு மீண்டும் கொழும்பு கோட்டைக்கு திரும்புவதற்கு வசதி ஏற்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி, காலியிலிருந்து கொழும்பு கோட்டைக்கு வருவதற்காகவும், பெலியத்தையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு வருவதற்காகவும் தலா இரண்டு விசேட ரயில் சேவைகளை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும், பதுளையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு வருவதற்காக இரண்டு ரயில் சேவைகளை இயக்கவும் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதன் மூலம் பொது மக்களுக்கு மீண்டும் கொழும்பு கோட்டைக்கு பயணிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை பண்டிகைக் காலத்தின் மூன்று நாட்களிலும் இலங்கை போக்குவரத்து சபையின் வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளது.அதன்படி, கடந்த 10, 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் மட்டும் 600 மில்லியன் வருமானத்தை ஈட்டியுள்ளனர்.இவ்வாறு இலங்கை போக்குவரத்து சபையின் பிரதிப் பொது முகாமையாளர் டி.எச்.ஆர்.டி. சந்திரசிறி தெரிவித்தார்.