• Nov 13 2025

போதைப்பழக்கத்திற்கு அடிமையான இளைஞர்களை மீட்டெடுக்க 300 பேருக்கு விசேட பயிற்சி!

Chithra / Nov 10th 2025, 1:11 pm
image

 

போதைப்பொருட்களுக்கு அடிமையான இளைஞர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் நோக்குடன், அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க ஆலோசகர்களை நியமிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இதற்காக சுமார் 300 ஆலோசகர்களுக்கு விசேட பயிற்சி வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த மறுவாழ்வுத் திட்டத்திற்காகத் தொண்டர் சேவையாளர்களைக் கொண்ட ஆலோசகர்கள் பயன்படுத்தப்பட உள்ளனர்.

தற்போது 750 பேர்களைக் கொண்ட ஆலோசகர்களின் தொண்டர் சேவைக் குழு ஒன்று இதற்கு தயாராக உள்ளது.

இவர்களில் சுமார் 300 பேர் தேவைப்படும் நேரங்களில் மறுவாழ்வு நடவடிக்கைகளுக்காக ஆலோசனை வழங்க ஈடுபடுத்தப்படுவார்கள்.

இவ்வாறு ஈடுபடுத்தப்படும் நபர்களுக்குச் சில சலுகைகள் அல்லது கொடுப்பனவு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஆனந்த விஜேபால சுட்டிக்காட்டினார்.

போதைப்பொருளுக்கு அடிமையான இளைஞர்களில் ஒரு பகுதியினருக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் என்றும், மற்றவர்கள் அவர்களின் நிலையைப் பொறுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மறுவாழ்வு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படும் இளைஞர்களின் பெற்றோர்களையும் அழைத்து, ஆலோசகர்களுடன் கலந்துரையாடிய பின்னரே மறுவாழ்வுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்தார்.

போதைப்பழக்கத்திற்கு அடிமையான இளைஞர்களை மீட்டெடுக்க 300 பேருக்கு விசேட பயிற்சி  போதைப்பொருட்களுக்கு அடிமையான இளைஞர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் நோக்குடன், அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க ஆலோசகர்களை நியமிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.இதற்காக சுமார் 300 ஆலோசகர்களுக்கு விசேட பயிற்சி வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.இந்த மறுவாழ்வுத் திட்டத்திற்காகத் தொண்டர் சேவையாளர்களைக் கொண்ட ஆலோசகர்கள் பயன்படுத்தப்பட உள்ளனர்.தற்போது 750 பேர்களைக் கொண்ட ஆலோசகர்களின் தொண்டர் சேவைக் குழு ஒன்று இதற்கு தயாராக உள்ளது.இவர்களில் சுமார் 300 பேர் தேவைப்படும் நேரங்களில் மறுவாழ்வு நடவடிக்கைகளுக்காக ஆலோசனை வழங்க ஈடுபடுத்தப்படுவார்கள்.இவ்வாறு ஈடுபடுத்தப்படும் நபர்களுக்குச் சில சலுகைகள் அல்லது கொடுப்பனவு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஆனந்த விஜேபால சுட்டிக்காட்டினார்.போதைப்பொருளுக்கு அடிமையான இளைஞர்களில் ஒரு பகுதியினருக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் என்றும், மற்றவர்கள் அவர்களின் நிலையைப் பொறுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.மறுவாழ்வு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படும் இளைஞர்களின் பெற்றோர்களையும் அழைத்து, ஆலோசகர்களுடன் கலந்துரையாடிய பின்னரே மறுவாழ்வுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement