• Nov 19 2024

வாக்களிக்க கிராமங்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக விசேட ரயில் சேவை

Chithra / Nov 13th 2024, 12:32 pm
image

 

நாளை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு வாக்களிக்க கிராமங்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக பல ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரை இயங்கும் யாழ்தேவி புகையிரதமும், கோட்டையிலிருந்து திருகோணமலை வரை இயங்கும் இரவு அஞ்சல் புகையிரதமும் இன்று, நாளைமற்றும் நாளை மறுதினம் மேலதிக பெட்டிகள் சேவையில் இயங்கும் என புகையிரத திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தேர்தலை முன்னிட்டு விசேட ரயில் இயக்கப்படாது என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பயணிகளின் வசதி கருதி இன்றைய தினம் 80 பேருந்துகளை மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன குறிப்பிட்டுள்ளார். 

அதே போன்று தேர்தல் நடவடிக்கைகளுக்காக சுமார் 1,000 பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

இதுதவிர காவல்துறையினரின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக 200 பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன தெரிவித்தார். 

தனியார் பேருந்துகள்  வழமை போன்று இயங்கும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். 

வாக்களிக்க கிராமங்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக விசேட ரயில் சேவை  நாளை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு வாக்களிக்க கிராமங்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக பல ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி, கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரை இயங்கும் யாழ்தேவி புகையிரதமும், கோட்டையிலிருந்து திருகோணமலை வரை இயங்கும் இரவு அஞ்சல் புகையிரதமும் இன்று, நாளைமற்றும் நாளை மறுதினம் மேலதிக பெட்டிகள் சேவையில் இயங்கும் என புகையிரத திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.தேர்தலை முன்னிட்டு விசேட ரயில் இயக்கப்படாது என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை பயணிகளின் வசதி கருதி இன்றைய தினம் 80 பேருந்துகளை மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன குறிப்பிட்டுள்ளார். அதே போன்று தேர்தல் நடவடிக்கைகளுக்காக சுமார் 1,000 பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுதவிர காவல்துறையினரின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக 200 பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன தெரிவித்தார். தனியார் பேருந்துகள்  வழமை போன்று இயங்கும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement