• May 17 2024

மூதூரில் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு ஆரம்பமான விளையாட்டு நிகழ்வுகள்...! கிழக்கு ஆளுநர் பங்கேற்பு...!

Sharmi / Apr 10th 2024, 3:57 pm
image

Advertisement

மூதூர் கிழக்கு - கட்டைபறிச்சான் தங்க நட்சத்திரம் விளையாட்டுக் கழகத்தினால் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நடாத்தப்படும் ஆரம்ப நிகழ்வினை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நேற்று (09) மாலை ஆரம்பித்து வைத்தார்.

இதன் போது முதல் நிகழ்வாக பெண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டியினை ஆரம்பித்து வைத்தார்.

முதன்மை அதிதியாக கலந்து சிறப்பித்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், தமிழர் கலாச்சார நடனங்களுடன் அழைத்துவரப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.

இதன்போது வரவேற்பு நடனம் வலைப்பந்தாட்ட போட்டி என்பன இடம் பெற்றது.

கிழக்கு மாகாண ஆளுநரின் சேவையினை பாராட்டி ஏற்பாட்டு குழுவினரால் நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வில் ஏனைய அதிதிகளாக மூதூர் பிரதேச செயலாளர் ,பிரதேச சபையின் செயலாளர் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

கட்டைபறிச்சான் தங்க நட்சத்திரம் விளையாட்டு கழகத்தினால் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு மரதன் ஓட்டம் ,படகோட்டம், வழுக்கு மரம் ஏறுதல்,கயிறிழுத்தல்,சைக்கிளோட்டம்,சங்கீத கதிரை, முட்டியுடைத்தல், ,மிட்டாய் உண்ணுதல், சங்கீதக் கதிரை, நீச்சல் உள்ளிட்ட பல விளையாட்டு நிகழ்வுகள் இடம் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


மூதூரில் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு ஆரம்பமான விளையாட்டு நிகழ்வுகள். கிழக்கு ஆளுநர் பங்கேற்பு. மூதூர் கிழக்கு - கட்டைபறிச்சான் தங்க நட்சத்திரம் விளையாட்டுக் கழகத்தினால் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நடாத்தப்படும் ஆரம்ப நிகழ்வினை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நேற்று (09) மாலை ஆரம்பித்து வைத்தார்.இதன் போது முதல் நிகழ்வாக பெண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டியினை ஆரம்பித்து வைத்தார்.முதன்மை அதிதியாக கலந்து சிறப்பித்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், தமிழர் கலாச்சார நடனங்களுடன் அழைத்துவரப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது. இதன்போது வரவேற்பு நடனம் வலைப்பந்தாட்ட போட்டி என்பன இடம் பெற்றது.கிழக்கு மாகாண ஆளுநரின் சேவையினை பாராட்டி ஏற்பாட்டு குழுவினரால் நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.இந்நிகழ்வில் ஏனைய அதிதிகளாக மூதூர் பிரதேச செயலாளர் ,பிரதேச சபையின் செயலாளர் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.கட்டைபறிச்சான் தங்க நட்சத்திரம் விளையாட்டு கழகத்தினால் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு மரதன் ஓட்டம் ,படகோட்டம், வழுக்கு மரம் ஏறுதல்,கயிறிழுத்தல்,சைக்கிளோட்டம்,சங்கீத கதிரை, முட்டியுடைத்தல், ,மிட்டாய் உண்ணுதல், சங்கீதக் கதிரை, நீச்சல் உள்ளிட்ட பல விளையாட்டு நிகழ்வுகள் இடம் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Advertisement

Advertisement

Advertisement