• May 19 2024

பலஸ்தீனத்தின் துன்பங்களை இலங்கையும் அனுபவித்தது..! சபையில் நினைவுபடுத்திய எதிர்க்கட்சி எம்.பி..! samugammedia

Chithra / Oct 20th 2023, 3:49 pm
image

Advertisement

 

ஏகாதிபத்தியங்கள் தமது காலனித்துவக் கொள்கையை மத்திய கிழக்கில் மிகவும் முன்னேறியதாகவும் மூலோபாய ரீதியாகவும் நடைமுறைப்படுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாகிர் மார்கார் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பல நூற்றாண்டுகளாக போர்த்துக்கேயர், டச்சு மற்றும் பிரித்தானிய ஏகாதிபத்தியங்களின் கீழ் காலனியாக பலஸ்தீன பூமி அனுபவித்த துயரத்திற்கு நிகரான ஒரு நிலையை இலங்கை எவ்வாறு அனுபவித்தது என்பதை நினைவுக்கு வருவதாக இம்தியாஸ் பக்கீர் மார்க்கர் கூறினார்.

அன்று இலங்கையின் சுதந்திரத்திற்காக வீர கப்பட்டிபொல, புறநாப்பு, கொங்கலேகொட பண்டா, வாரியபொல தேரர், குடாபொல தேரர் என பல்வேறு காலகட்டங்களில் சுதந்திரப் போராட்ட மாவீரர்கள் எழுந்து நின்று போராடியவர்கள் என்றும் அவர் இதன்போது நினைவு கூர்ந்தார்.

அன்றும் அவர்களுக்கு ‘பயங்கரவாதிகள்’ என்று முத்திரை குத்தி கொடூரமான அடக்குமுறையை மேற்கொண்டதாகத் தெரிவித்த இம்தியாஸ் பகீர் மார்க்கர், ஏகாதிபத்திய சக்திகளும் அன்றைய காலத்தில் மகாத்மா காந்தி, மண்டேலா, யாசிர் அராபத் ஆகியோரின் பெயர்களுக்கு முன்னால் பயங்கரவாதி என்ற அடைமொழியைப் பயன்படுத்தினர் என்றார்.

 

பலஸ்தீனத்தின் துன்பங்களை இலங்கையும் அனுபவித்தது. சபையில் நினைவுபடுத்திய எதிர்க்கட்சி எம்.பி. samugammedia  ஏகாதிபத்தியங்கள் தமது காலனித்துவக் கொள்கையை மத்திய கிழக்கில் மிகவும் முன்னேறியதாகவும் மூலோபாய ரீதியாகவும் நடைமுறைப்படுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாகிர் மார்கார் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.பல நூற்றாண்டுகளாக போர்த்துக்கேயர், டச்சு மற்றும் பிரித்தானிய ஏகாதிபத்தியங்களின் கீழ் காலனியாக பலஸ்தீன பூமி அனுபவித்த துயரத்திற்கு நிகரான ஒரு நிலையை இலங்கை எவ்வாறு அனுபவித்தது என்பதை நினைவுக்கு வருவதாக இம்தியாஸ் பக்கீர் மார்க்கர் கூறினார்.அன்று இலங்கையின் சுதந்திரத்திற்காக வீர கப்பட்டிபொல, புறநாப்பு, கொங்கலேகொட பண்டா, வாரியபொல தேரர், குடாபொல தேரர் என பல்வேறு காலகட்டங்களில் சுதந்திரப் போராட்ட மாவீரர்கள் எழுந்து நின்று போராடியவர்கள் என்றும் அவர் இதன்போது நினைவு கூர்ந்தார்.அன்றும் அவர்களுக்கு ‘பயங்கரவாதிகள்’ என்று முத்திரை குத்தி கொடூரமான அடக்குமுறையை மேற்கொண்டதாகத் தெரிவித்த இம்தியாஸ் பகீர் மார்க்கர், ஏகாதிபத்திய சக்திகளும் அன்றைய காலத்தில் மகாத்மா காந்தி, மண்டேலா, யாசிர் அராபத் ஆகியோரின் பெயர்களுக்கு முன்னால் பயங்கரவாதி என்ற அடைமொழியைப் பயன்படுத்தினர் என்றார். 

Advertisement

Advertisement

Advertisement