• May 08 2024

பெற்றோர்களே அவதானம்....! உங்கள் பிள்ளைகளும் பாதிக்கப்படலாம்...!samugammedia

Sharmi / Oct 20th 2023, 3:59 pm
image

Advertisement

கண் நோய்க்கு மேலதிகமாக காய்ச்சலுடன் கூடிய வயிற்றுப்போக்கு நோயும் பாடசாலை மாணவர்களிடையே பரவி வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மழையுடன் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

அதேவேளை, இந்த நாட்களில் பாடசாலை மாணவர்களிடையே கண் நோய் பரவி வருவதால், கல்வி அமைச்சு இது தொடர்பில் அனைத்து பாடசாலைகளுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

கான்ஜுன்க்டிவிடிஸ் எனப்படும் இந்த நோய் வைரஸால் பரவுகிறது.  மேலும் வலி, கண்ணீர், சிவத்தல் மற்றும் கண் அரிப்பு ஆகியவை இதன் அறிகுறிகளாகும். இந்த கண் நோய் நிலை நாட்டின் பல பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் பதிவாகியுள்ளது.

கொழும்பு லேடி ரிட்ஜ் சிறுவர் வைத்தியசாலையின் கண் சத்திரசிகிச்சை நிபுணர் டொக்டர் ஹிரண்ய அபேசேகர, தமது பிள்ளைகளுக்கு ஏதேனும் கண் நோய் இருந்தால் பாடசாலைக்கு அனுப்புவதைத் தவிர்க்குமாறு பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, கண்நோய் மட்டுமன்றி பாடசாலை மாணவர்களிடையே காய்ச்சலும் பரவி வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

பெற்றோர்களே அவதானம். உங்கள் பிள்ளைகளும் பாதிக்கப்படலாம்.samugammedia கண் நோய்க்கு மேலதிகமாக காய்ச்சலுடன் கூடிய வயிற்றுப்போக்கு நோயும் பாடசாலை மாணவர்களிடையே பரவி வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மழையுடன் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார். அதேவேளை, இந்த நாட்களில் பாடசாலை மாணவர்களிடையே கண் நோய் பரவி வருவதால், கல்வி அமைச்சு இது தொடர்பில் அனைத்து பாடசாலைகளுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.கான்ஜுன்க்டிவிடிஸ் எனப்படும் இந்த நோய் வைரஸால் பரவுகிறது.  மேலும் வலி, கண்ணீர், சிவத்தல் மற்றும் கண் அரிப்பு ஆகியவை இதன் அறிகுறிகளாகும். இந்த கண் நோய் நிலை நாட்டின் பல பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் பதிவாகியுள்ளது. கொழும்பு லேடி ரிட்ஜ் சிறுவர் வைத்தியசாலையின் கண் சத்திரசிகிச்சை நிபுணர் டொக்டர் ஹிரண்ய அபேசேகர, தமது பிள்ளைகளுக்கு ஏதேனும் கண் நோய் இருந்தால் பாடசாலைக்கு அனுப்புவதைத் தவிர்க்குமாறு பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டார். இதேவேளை, கண்நோய் மட்டுமன்றி பாடசாலை மாணவர்களிடையே காய்ச்சலும் பரவி வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement