• Jan 26 2025

உலகின் சிறந்த சுற்றுலாத் தலங்களில் முதல் 10 இடங்களுக்குள் இலங்கை!

Chithra / Jan 19th 2025, 1:16 pm
image


இலங்கையை 2025 ஆம் ஆண்டிற்கான ஒன்பதாவது சிறந்த சுற்றுலா இடமாக இங்கிலாந்தை தளமாகக் கொண்ட செய்தி நிறுவனமான பிபிசி தேர்ந்தெடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பு மற்றும் உலக சுற்றுலா பேரவை உள்ளிட்ட உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா அதிகாரிகளின் தகவல்கள் மற்றும் ஆய்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் பி.பி.சி நிறுவனம் இந்த புதிய அறிக்கையை வௌியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் இலங்கை 9ஆவது இடத்தில் உள்ளதுடன், முதல் 10 இடங்களில் உள்ள ஒரே தெற்காசிய நாடாக இலங்கை காணப்படுகிறது.

பிபிசி தனது சிறந்த 25 இடங்களின் வெற்றியாளர்களை அறிவிக்கையில், 

மூடுபனி படர்ந்த மலை உச்சியில் உள்ள தேயிலை தோட்டங்கள் மற்றும் அதன் பழங்கால ஆலயங்கள் வரை சுற்றித் திரியும் காட்டு யானைகள் மற்றும் நீர்ச்ச்சறுக்கு போன்ற அநேகமான பார்வையிடங்களை இலங்கை கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

தரவரிசையில் டொமினிகன் குடியரசு முதலிடத்திலும், ஜப்பானிய தீவான நவோஷிமா இரண்டாவது இடத்திலும் உள்ளன. இத்தாலியில் உள்ள டோலமைட் மலைகள் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளன.


 

உலகின் சிறந்த சுற்றுலாத் தலங்களில் முதல் 10 இடங்களுக்குள் இலங்கை இலங்கையை 2025 ஆம் ஆண்டிற்கான ஒன்பதாவது சிறந்த சுற்றுலா இடமாக இங்கிலாந்தை தளமாகக் கொண்ட செய்தி நிறுவனமான பிபிசி தேர்ந்தெடுத்துள்ளது.ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பு மற்றும் உலக சுற்றுலா பேரவை உள்ளிட்ட உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா அதிகாரிகளின் தகவல்கள் மற்றும் ஆய்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் பி.பி.சி நிறுவனம் இந்த புதிய அறிக்கையை வௌியிட்டுள்ளது.இந்தப் பட்டியலில் இலங்கை 9ஆவது இடத்தில் உள்ளதுடன், முதல் 10 இடங்களில் உள்ள ஒரே தெற்காசிய நாடாக இலங்கை காணப்படுகிறது.பிபிசி தனது சிறந்த 25 இடங்களின் வெற்றியாளர்களை அறிவிக்கையில், மூடுபனி படர்ந்த மலை உச்சியில் உள்ள தேயிலை தோட்டங்கள் மற்றும் அதன் பழங்கால ஆலயங்கள் வரை சுற்றித் திரியும் காட்டு யானைகள் மற்றும் நீர்ச்ச்சறுக்கு போன்ற அநேகமான பார்வையிடங்களை இலங்கை கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.தரவரிசையில் டொமினிகன் குடியரசு முதலிடத்திலும், ஜப்பானிய தீவான நவோஷிமா இரண்டாவது இடத்திலும் உள்ளன. இத்தாலியில் உள்ள டோலமைட் மலைகள் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளன. 

Advertisement

Advertisement

Advertisement